ஐபோன் 14 பிளிப்கார்டில் அசத்தல் தள்ளுபடி... ரூ. 12 ஆயிரத்திற்கும் மேல் குறைவு!

iPhone Flipkart Big Bachat Dhamaal Sale: ஐபோன் 14 மொபைல், பிளிப்காட்டில் எங்கும் கிடைக்காத விலையில், அதிக தள்ளுபடி திட்டங்களுடன் தற்போது விற்பனையில் உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 4, 2023, 03:42 PM IST
  • கிரேடிட், டெபிட் கார்டுகளில் தள்ளுபடி உள்ளது.
  • ஐபோன் 14 இரண்டு வெர்ஷனில் கிடைக்கிறது.
  • ரீ-சேல் ஆஃபரும் உள்ளது.
ஐபோன் 14 பிளிப்கார்டில் அசத்தல்  தள்ளுபடி... ரூ. 12 ஆயிரத்திற்கும் மேல் குறைவு! title=

iPhone Flipkart Big Bachat Dhamaal Sale: ஆப்பிள் ஐபோன் 14, தற்போது பிளிப்கார்ட்டில் நடைபெற்று வரும் Big Budget Dhamaal விற்பனையின் போது 11,901 ரூபாய் தள்ளுபடியில் விற்பனையாகிறது. இதன்மூலம், ஐபோன் 14 தற்போது ரூ.71,999க்கு கிடைக்கிறது. இதனை வாங்குபவர்களுக்கு கூடுதல் வங்கிச் சலுகைகளும் கிடைக்கும். இது மேலும் விலையைக் குறைக்கும்.  128 GB மற்றும் 256 GB இன்டர்நெல் மெமரியுடன் கிடைக்கிறது. 

பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 தற்போது ரூ.71,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் HDFC பேங்க் கார்டு கிரெடிட் மூலம் 4,000 ரூபாய் வரையிலான வங்கிச் சலுகைகளையும் பெறுவார்கள். Flipkart Axis பேங்க் கார்டில், இதனை வாங்குபவர்கள் 5 சதவிகித கேஷ்பேக் பெறுவார்கள். 

அட்டகாசமான தள்ளுபடி

சலுகைகளுக்கு பிறகு, 128GB வெர்ஷன் 67,999 ரூபாய்க்கு கிடைக்கும். அதற்கு அடுத்த 256GB வெர்ஷன் 77,999  ரூபாய்க்கும் கிடைக்கும். பழைய ஸ்மார்ட்போன்களில் மாடலைப் பொறுத்து 23,000 ரூபாய் வரை பெறக்கூடிய எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வாங்குபவர்கள் தேர்வு செய்யலாம். உங்கள் பழைய கைபேசி ஐபோனாக இருந்தால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விட சிறந்த ரீ-சேல் மதிப்பைப் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிஎஸ்என்எல் ரூ. 769 ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் அழைப்பு, டேட்டா... எக்கச்சக்க அம்சங்கள்

ஆப்பிள் ஐபோன் முக்கிய அம்சங்கள்

6.1 இன்ச் லிக்யூட் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப்செட் மூலம் ஐபோன் 14 இயக்கப்படுகிறது. இது சமீபத்திய iOS 16 பதிப்பில் இயங்குகிறது. புகைப்படம் எடுப்பதற்கு, இது பின்புற கேமராவில் இரட்டை 12MP கேமரா அமைப்புடன் வருகிறது. ஆப்பிள் ஐபோன் 14, 128GB மற்றும் 256GB இன்டர்நெல் மெமரி வெர்ஷன்களில் கிடைக்கிறது. ஐபோன் கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது.

படிக்காதவர்களுக்காக, ஆப்பிள் சமீபத்தில் அதன் இரண்டாம் தலைமுறை HomePod-ஐ 32,900 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியது. இது இப்போது மிட்நைட் மற்றும் ஒயிட் வண்ண வகைகளில் ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரில் இந்தியாவில் வாங்கலாம்.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மாதாந்திர தவணை முறையில் 5,742 ரூபாய் செலுத்தி இரண்டாம் தலைமுறை HomePod-ஐ வாங்கலாம். மேலும், ஆப்பிள் நிறுவனம் புதிய HomePod-ஐ வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஆறு மாத Apple Music சந்தாவை வழங்குகிறது.

மேலும் படிக்க | எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் OPPO-வின் புதிய 5ஜி போன்..! விலை மட்டும் பாக்காதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News