உடனடி கடன் செயலிகள்: நம் அன்றாட வாழ்வின் பல தேவைகளுக்காக நாம் அவ்வப்போது பல கடன்களை பெறுகிறோம். ஆனால் எங்கிருந்து கடன் வாங்குகிறோம் என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். தற்காலத்தில் பல போலி உடனடி கடன் ஆப்கள் கடன் சேவை வழங்கும் போர்வையில் மோசடி செய்கின்றன. ஏதேனும் உடனடி கடன் செயலி உங்களைத் தொடர்பு கொண்டாலோ அல்லது, நீங்கள் தொடர்பு கொண்டாலோ, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவற்றால் நீங்கள் ஏமாற்றப்படலாம். இப்படிப்பட்ட தருணங்களில் உங்களை பாதுகாத்துக் கொள்ள பாரத ஸ்டேட் வங்கி சில சிறந்த உதவிக்குறிப்புகளைக் கொடுத்துள்ளது. இவற்றை மனதில் கொள்வது நல்லதாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செயலியை முழுமையாக சரிபார்க்கவும்


நீங்கள் உடனடி கடன் செயலியைப் பதிவிறக்குகிறீர்கள் என்றால், அதைப் பதிவிறக்குவதற்கு முன் அதைச் முழுமையாக சரிபார்க்கவும், அதாவது செக் செய்யவும். அந்த செயலி எவ்வளவு உண்மையானது? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். செயலியின் நம்பகத்தன்மையை அறிவது மிகவும் முக்கியமாகும். இது பல வித பிரச்சனைகளிலிருந்து உங்களை காக்கும்.


மேலும் படிக்க | Cheap Home Loan: குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்; எந்த வங்கியில் எவ்வளவு 


உங்கள் தரவு திருடப்படலாம்


தெரியாத எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ கூறுகிறது. மேலும், அங்கீகரிக்கப்படாத உடனடி கடன் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகின்றது. இது உங்கள் தரவு திருடப்படுவதற்கு வழிவகுக்கும்.


அனுமதி அமைப்புகளைச் செக் செய்யவும்


உங்கள் தரவு திருடப்படுவதைத் தடுக்க, மொபைல் ஃபோனில் உள்ள செயலியின் அனுமதி அமைப்பை கண்டிப்பாக செக் செய்யவும். இப்படி அடிக்கடி செய்வதால் உங்கள் தரவு பாதுகாப்படுவதோடு, உங்கள் தனிப்பட்ட தகவல்களும் கசியாமல் இருக்கும். 


போலீசில் புகார் செய்யுங்கள்


பணக்கடன் வழங்கும் சந்தேகத்திற்கிடமான செயலி அல்லது உடனடி கடன் செயலியை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக காவல்துறையில் புகாரளிக்கவும். இதன் மூலம், நீங்கள் எந்த வகையிலும் ஏமாற்றப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். மேலும் இது போன்ற மோசடி சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமலும் தவிர்க்கலாம்.


உடனடி கடன் செயலி ஒரு மோசடியாகவும் இருக்கலாம்


உடனடி கடன் வழங்கும் அனைத்து செயலிகளும் உண்மையானவை அல்ல, சில செயலிகள் மோசடி செயலிகளாகவும் இருக்கலாம் என எஸ்பிஐ கூறுகிறது. பல போலி உடனடி கடன் செயலிகள் மக்களை சிக்க வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கடன் வாங்குவதற்கு முன் சரியான தளத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமாகும். இதில் எந்த அலட்சியமும் வேண்டாம் என்று எஸ்பிஐ எச்சரிக்கிறது. 


மேலும் படிக்க | இரு சக்கர வாகன கடன்களை பெற சில ஸ்மார்ட் டிப்ஸ்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ