எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ் வட்டி விகிதம்: இன்றைய காலகட்டத்தில் சாமானியர்களால் சிறிய அளவில் கூட சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகள் அதிகரித்துவிட்டன. மக்கள் சேமிக்க முயற்சித்தாலும், எது தங்களுக்கு நல்ல மற்றும் சிறந்த சேமிப்புத் திட்டமாக இருக்கும் என்பதில் எப்போதும் குழப்பம் இருக்கிறது. முதலீட்டைப் பற்றி ஒருவர் சிந்திக்கும் போதெல்லாம், ஃபிக்ஸட் டெபாசிட் அதாவது எஃப்டி என்ற பெயர்தான் முதலில் வரும். முதலீட்டைப் பொறுத்தவரை எஃப்டி ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகின்றது. இதில் ரிட்டர்ன் அதாவது லாபம் நிச்சயமான உத்தரவாதத்துடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் பங்குச் சந்தையை போல சந்தை தொடர்பான ஆபத்துகள் இல்லை என்பதும் இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.
எஸ்பிஐ மற்றும் தபால் அலுவலகத்தின் எஃப்டி வருமான விவரங்கள்
இதில் சேமிப்புக் கணக்கை விட அதிக வருமானம் கிடைக்கும். நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ மற்றும் தபால் நிலைய திட்டங்கள் ஃபிக்சட் டெபாசிட்களை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில், எஃப்டி - இல் உள்ள வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த ஒப்பீட்டின் மூலம் எதில் அதிக வட்டி கிடைக்கும் என்பதை நாம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | எச்சரிக்கை: ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிகளை மாற்றியுள்ளது எஸ்பிஐ!
எஸ்பிஐ-ல் எஃப்டி விகிதங்கள் என்ன
எஸ்பிஐ கடைசியாக ஜூன் 14, 2022 அன்று ரூ.2 கோடிக்குக் குறைவான எஃப்டி-களுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியது. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது பொது வாடிக்கையாளர்களுக்கு 2.90 சதவீதம் முதல் 5.50 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.30 சதவீதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.
வட்டி விகித விவரங்கள் பின்வருமாறு
- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 2.90 %
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.90%
- 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - 4.40%
- 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு - 4.60%
- 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு - 5.30 %
- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு - 5.35%
- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு - 5.45%
- 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - 5.50%
தபால் அலுவலகத்தில் இந்த வட்டி கிடைக்கும்
வங்கிகளைத் தவிர, தபால் நிலையத்திலும் எஃப்டி மூலம் டெபாசிட் செய்யலாம். இது போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் என்று அழைக்கப்படுகிறது. 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அஞ்சல் அலுவலக நேர வைப்புத்தொகையில் பணத்தை டெபாசிட் செய்யலாம். 1 ஆண்டு, 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகள் கொண்ட தபால் அலுவலக நேர வைப்புகளுக்கு 5.5% வட்டி கிடைக்கும். டெபாசிட் செய்பவர்கள் இதில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 6.7% வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ