ரயில்களில் சைவ உணவு மட்டும் தான் கிடைக்குமா: ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்து காலண்டரின் படி, ஜூலை 4 ஆம் தேதி முதல் சாவான் மாதம் தொடங்குகிறது. இது சிவனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. தற்போது இந்த புனித மாதத்தில் ரயிலில் பயணம் செய்யும் சிவ பக்தர்களுக்கு ரயில்வே துறை அசத்தலான செய்தியை தந்துள்ளது. அதன்படி தற்போது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாவான் மாதத்தில், இந்த நகரத்தில் ரயிலில் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும். பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் 'சாவான்' மாதத்தில் அதாவது நாளை (ஜூலை 4) முதல் சைவ உணவுகள் மட்டுமே கிடைக்கும் என்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்வது முற்றிலும் தடுக்கபடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், தூய்மையிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ரயிலா இல்லை... 5 ஸ்டார் ஹோட்டலா... இந்திய ரயில்வேயின் ‘சில’ ஆடம்பர ரயில்கள்!


வெங்காயம்-பூண்டு இல்லாத உணவு வழங்கப்படும்
இந்து நாட்காட்டியின் சிராவண மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானையும் உகந்த மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இது ஆடி அமாவாசையிலிருந்து ஆவணி அமாவாசை வரையுள்ள சுமார் 59 நாட்கள் சிராவண மாதமாக கணக்கிடப்படுகிறது. இந்த மாதத்தையொட்டி, வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவு பயணிகளுக்கு வழங்கப்படும். மேலும் சைவ உணவுகளுடன் பழங்களும் வழங்கப்படும். இந்த ஏற்பாடு சவான் மாதம் அதாவது நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.


இந்த நிலையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சவான் மாதத்தில் பழங்களையும் வழங்க ஏற்பாடு செய்யும். இத்தகைய சூழ்நிலையில், ஐஆர்சிடிசி சவான் விரதத்தின் போது உணவு மற்றும் பானங்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் பயணிகளிடம் சிறப்பு கவனம் செலுத்தும். அத்துடன் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சைவ உணவு வழங்க முழுமையான ஏற்பாடுகள் செய்யப்படும். ஜூலை 3 ஆம் தேதி இரவு முதல், பகல்பூர் ஃபுட் பிளாசாவில் அசைவம் நிறுத்தப்படும் மற்றும் மெனுவில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும். தகவலின்படி, பகல்பூர் ஐஆர்சிடிசியின் சைவ உணவில் சீஸ், காய்கறிகள், சாதம், தால், ரொட்டி மற்றும் சாலட் ஆகியவை அடங்கும்.


இந்த செய்தி வெறும் வதந்தியே
இதற்கிடையில் இது தொடர்பான கருத்தை தற்போது இந்தியன் ரயில்வே முற்றிலும் மறுத்துள்ளது. மேலும் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதன்படி அதில், "ஐஆர்சிடிசியால் இது போன்ற அறிவிப்பு ஒன்றும் வழங்கப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பொருட்களும் உணவுப் பிரிவிலிருந்து பயணிகளுக்கு விற்பனைக்குக் கிடைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘7’ விதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ