Indian Railways Retiring Room: IRCTC ஓய்வுபெறும் அறை முன்பதிவு: ரயில் பயணம் எவ்வளவு சிக்கனமான ஒன்றோ அதேபோல், மிகவும் வசதியான சேவையையும் அளிக்கிறது. இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு பல வசதிகளை வழங்குகிறது. பண்டிகை மற்றும் கோடை விடுமுறையின் போது, பயணிகளுக்கு மிகுந்த நிம்மதியை அளிக்கும் வகையில், பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தவிர, மற்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. ரயில் நிலையத்தில் தங்குவதற்கான வசதியும் இதில் ஒன்று. பெரும்பாலான பயணிகளுக்கு இந்த வசதி தெரியாததால், ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள ஓட்டல் அறைகளில் பெரிய தொகைக்கு வாடகையில் தங்குகின்றனர். எவ்வளவு ரூபாய்க்கு ரயில் நிலையத்தில் உள்ள அறையை எப்படி பதிவு செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: ரயிலில் இதையெல்லாம் செய்தால் தண்டனை... ஜாக்கிரதை!!
நீங்கள் ரயிலில் பயணம் செய்தால், நீங்கள் ரயில் நிலையத்தில் தங்க வேண்டும் என்றால், ரயில் நிலையத்திலேயே உங்களுக்கு ஒரு அறை கிடைக்கும். இதற்காக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று அறைக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் ரயில் நிலையத்தில் உங்களுக்கு மிகவும் மலிவான அறைகள் கிடைக்கும்.
உங்களுக்கு ஹோட்டல் போன்ற அறை மிகவும் மலிவாக கிடைக்கும். ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை ஏசி அறைகள் மற்றும் ஹோட்டல் அறையைப் போலவே உங்களுக்குத் தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். ஒரே இரவுக்கான அறை முன்பதிவு கட்டணம் ரூ. 100 முதல் ரூ. 700 வரை இருக்கலாம். ரயில் நிலையத்தில் அறையை முன்பதிவு செய்ய, இங்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.
முன்பதிவு செய்யும் முறை
- முதலில் ஐஆர்சிடிசி கணக்கு தொடங்க வேண்டும்.
- இதற்குப் பிறகு உள்நுழைந்து My Reservation என்ற ஆப்ஷனுக்குச் செல்லவும்.
- உங்கள் டிக்கெட் முன்பதிவின் கீழே 'Retiring Room' என்ற ஆப்ஷன் தோன்றும்.
- இங்கே கிளிக் செய்வதன் மூலம் அறையை முன்பதிவு செய்வதற்கான ஆப்ஷனை பெறுவீர்கள்.
- இங்கே உங்கள் தனிப்பட்ட மற்றும் பயணத் தகவலை உள்ளிட வேண்டும்.
- பணம் செலுத்திய பிறகு உங்கள் அறை முன்பதிவு செய்யப்படும்.
இலவச உணவு
இது ஒருபுறம் இருக்க, ரயில்வே துறையின் ஒரு விதியின் படி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் உணவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளுக்கு அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலம் செய்யப்பட்டுள்ளது. பல நேரங்களில் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடையாமல் தாமதமாக வரும். ஆனால், ரயில் தாமதமாக வரும்போது, ரயில்வே தரப்பில் இருந்து இலவச உணவு வசதி தரப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. zeenews.india.com/tamil/lifestyle/big-update-free-food-given-by-indian-railways-in-this-situation-says-railway-minister-ashwini-vaishnaw-451306
மேலும் படிக்க | Indian Railways அட்டகாசமான அப்டேட்: இனி ரயில்களில் இலவச உணவு.. குஷியில் பயணிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ