உங்கள் மொபைல் வாலட்டுகளின் திறன் இப்போது கூடியுள்ளது. ரிசர்வ் வங்கி ஏப்ரல் 7, 2021-ல் வெளியிடப்பட்ட தனது சமீபத்திய நாணயக் கொள்கை அறிவிப்புகளில் சில புதிய நடவடிக்கைகளைப் பற்றி கூறியுள்ளது. இதன் மூலம், Amazon Pay, Paytm, PhonePe, MobiKwik, PayU மற்றும் Ola Pay போன்ற வாலட்டுகள் அளிக்கும் சலுகைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி (Reserve Bank) ஆளுநர் சக்தி காந்த தாஸ் மொபைல் வாலட்டின் பயன்பாடுகளை அதிகரிக்கும் மூன்று முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார். ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) வழங்குநர்கள், கார்டு நெட்வொர்க்குகள், ஒயிட் லேபிள் ஏடிஎம் (WLA) ஆபரேட்டர்கள், வர்த்தக பெறுதல் தள்ளுபடி அமைப்பு (TReDS) இயங்குதளங்கள் உள்ளிட்ட வங்கி அல்லாத நிறுவனங்களின் கட்டண அமைப்புகளுக்கு RTGS மற்றும் NEFT கட்டண முறைகளை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. வங்கி அல்லாத கட்டண அமைப்பு ஆபரேட்டர்களில் Amazon Pay, Paytm, PhonePe, MobiKwik, PayU மற்றும் Ola Pay போன்றவை அடங்கும். இனி இந்த சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு RTGS மற்றும் NEFT முறைகள் வழியாக நிதியை பரிமாற்ற உதவும்.


இரண்டாவதாக, கட்டண வாலட்டுகளை பயன்படுத்துபவர்கள் இதில் 2 லட்சம் ரூபாய் வரை தொகையை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​தனிநபர்கள் அதிகபட்சமாக ரூ .1 லட்சம் வரைதான் இருப்பு வைத்திருக்க முடியும்.


மொபைல் வாலட்டுகளின் இண்டர்போர்டபிலிட்டியை கட்டாயமாக்குவது மூன்றாவது பெரிய முடிவாகும். அதாவது, உதாரணமாக, PayTm வாலட் வைத்திருப்பவர், கூடிய விரைவில், MobiKwik, Amazon Pay அல்லது Ola pay போன்ற வாலட்டுகளுக்கு பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். 


ALSO READ: SBI Customers Alert: வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி அநியாய வசூல்!


மக்களிடையே டிஜிட்டல் கட்டணத்தை (Digital Payment) மேலும் ஊக்குவிப்பதற்காக மத்திய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, உங்கள் மொபைல் வாலட்டுகளிலும் இப்போது உங்கள் வங்கிக் கணக்குகளைப் போலவே பல வசதிகளைப் பெற முடியும். 


உங்கள் வாலட்டுகளிலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமா? 


கட்டண வாலட்டுகளில் NEFT மற்றும் RTGS வசதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உங்கள் சொந்த வங்கிக் கணக்குகள் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் பணம் அனுப்பத் தொடங்கலாம். வாலட் சேவைக்கு ஒரு கோரிக்கையை எழுப்பி பணத்தை உங்கள் கணக்குகளுக்கு மாற்ற முடியும் என்றாலும், பணத்தை விரைவாக உங்கள் வங்கிக் கணக்கில் திருப்பி அனுப்புவது எளிதாக இருக்கும்.


வங்கி அல்லாத பிபிஐ வழங்குநர்களின் முழு-கேஒய்சி பிபிஐகளுக்கும், வரம்புக்கு உட்பட்டு, வங்கிகள் அல்லாத ப்ரீ-பெய்ட் கட்டண கருவிகளில் பணத்தை திரும்பப் பெறும் வசதியையும் ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. தற்போது, ​​வங்கிகளால் வழங்கப்பட்ட முழு-கே.ஒய்.சி பிபிஐக்களுக்கு மட்டுமே பணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. மேலும் இந்த வசதி  ATM-கள் மற்றும் PoS டெர்மினல்கள் மூலம் கிடைக்கிறது.


ALSO READ: Bank Account மூலம் உங்களுக்கு கிடைக்கும் Overdraft வசதியின் முக்கிய அம்சங்கள் இவைதான்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR