டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துகிறீர்களா? இந்த விதிகள் மாறவுள்ளன!!

உங்கள் மொபைல் அல்லது மின்சார பில் அல்லது நெட்ஃபிக்ஸ் சந்தாவை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் நீங்கள் இணைத்திருந்தால், அதில் கூடுதல் அங்கீகாரம் இல்லாத நிலையில், ஏப்ரல் 1 முதல் உங்கள் ஆட்டோ டெபிட் கட்டணம் செலுத்தும் செயல்முறை நிறைவடையாது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 31, 2021, 03:54 PM IST
  • டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தும் உறையில் பெரிய மாற்றம்.
  • பிற கட்டண முறைகளும் ஏப்ரல் 1 முதல் மாற்றப்படுகின்றன.
  • பில்கள், சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவை ஏப்ரல் 1 முதல் தானாக டெபிட் செய்யப்படாது.
டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் கட்டணம் செலுத்துகிறீர்களா? இந்த விதிகள் மாறவுள்ளன!! title=

Banking News: உங்கள் மொபைல் அல்லது மின்சார பில் அல்லது நெட்ஃபிக்ஸ் சந்தாவை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் இணைத்திருந்தால், அதில் கூடுதல் அங்கீகாரம் இல்லாத நிலையில், ஏப்ரல் 1 முதல் உங்கள் ஆட்டோ டெபிட் கட்டணம் செலுத்தும் செயல்முறை நிறைவடையாது. இது உங்கள் சந்தா மற்றும் கட்டண முறைகளை பாதிக்கும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள், கார்ட் சேவை வழங்குநர்கள், ஆன்லைன் விற்பனையாளர்கள் கூடுதல் காரணி அங்கீகார விதிகளை பின்பற்ற வேண்டியிருந்தது.

இருப்பினும், வங்கிகளால் (Banks) அவற்றை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. மேலும், புதிய விதிகளை அமல்படுத்துவதால், வங்கிகளின் செலவு அதிகரிக்கும், அதன் விளைவால் வாடிக்கையாளர்களின் சுமையும் அதிகரிக்கும். 

கிரெடிட், டெபிட் கார்டு ஆட்டோ கட்டண செலுத்தலில் சிரமம்

- ஏப்ரல் 1 முதல் மொபைல், மின்சாரம், பயன்பாட்டு பில்கள் ஆகியவற்றின் ஆட்டோ பேமெண்டில் சிக்கல் வரலாம் 
- ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களில் கூடுதல் காரணி அங்கீகாரம் அவசியம்
- வங்கி மற்றும் கார்ட் சேவை வழங்குநர்கள் முழுமையாக தயாராக இல்லை, செலவு அதிகரிப்பதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்
- ஆட்டோ கட்டண முறையில் வங்கிகளின் செலவு அதிகரித்தால், அதன் தாக்கம் வாடிக்கையாளரின் மீதும் இருக்கும். 
- OTT மற்றும் டிஜிட்டல் சந்தாக்களும் சிக்கலுக்கு ஆளாகும் 
- சேவை வழங்குநரின் பக்கத்தில் கட்டண ஆப்ஷன் இருக்கும்

ALSO READ: வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்

கார்டுகளின் ஆட்டோ கட்டண முறைகளில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

 - பணம் செலுத்த வேண்டிய தேதிக்கு 5 நாட்களுக்கு முன்னர் வங்கிகள் அறிவிப்பை அனுப்ப வேண்டும்
- அறிவிப்பில் வாடிக்கையாளரின் ஒப்புதல் தேவை
 - 5000 ரூபாய்க்கும் அதிகமான கட்டணங்களுக்கு OTP தேவை
- வங்கி மோசடி (Bank Fraud) மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக இந்த புதிய வழிகாட்டுதல்கள்
- வழிகாட்டுதல்கள் 1 ஏப்ரல் 2021 முதல் அமலுக்கு வரும். 
 
இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

- பில்கள், சப்ஸ்க்ரிப்ஷன் ஆகியவை ஏப்ரல் 1 முதல் தானாக டெபிட் செய்யப்படாது
- வங்கி இன்னும் மின் கட்டளைகளுக்கு (e-mandates) முழுமையாக தயாராகவில்லை
- வாடிக்கையாளர் பாதுகாப்பு அளிப்பதற்கும் மோசடியை தடுப்பதற்கும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்

தானியங்கி கட்டணம் தோல்வியடையக்கூடும்

- டெபிட், கிரெடிட் கார்டு (Credit Card) ஆட்டோ கட்டண முறை ஏப்ரல் 1 முதல் தோல்வியடையக்கூடும்
- கார்ட் மூலம் செலுத்தப்படும் தானியங்கி மாதாந்திர தொடர்ச்சி கட்டணத்தில் புதிய விதிகள் பொருந்தும்
- மின்சாரம், பயன்பாட்டு பில்கள், சந்தாக்கள் பாதிக்கப்படும்.

ALSO READ: Post Office திட்டங்களுக்கு புதிய விதி: 20 லட்சத்துக்கு மேலாக பணம் எடுக்க 2% TDS

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News