பெங்களூரு: paytm நிறுவனத்துடன் இணைந்து மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பண்டிகைக்கால சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது Flipkart. அக்டோபர் 16ஆம் தேதி முதல் பேடிஎம் வாலட் (paytm Wallet) மற்றும் பேடிஎம் யுபிஐ (Paytm UPI) மூலம் 'பிக் பில்லியன் நாட்கள் விற்பனை' (Big Billian Days Sale) செய்யப்போவதாக ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் போது' பிளிப்கார்ட்டிலிருந்து பொருட்கள் வாங்குவது விலை மலிவாக இருக்கும். அதுமட்டுமல்ல, தங்கள் Paytm Walletஇல் உடனடியாக cashback சலுகையும் பயனர்களுக்கு கிடைக்கும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மில்லியன் கணக்கான Paytm பயனர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்வார்கள்
பிளிப்கார்ட்டின் Fintech and Payments குழுமத்தின் தலைவர் ரஞ்சித் போயனபள்ளி இதுபற்றி விளக்கமாக கூறுகிறார்: "பண்டிகை காலங்களில், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான Paytm பயனர்கள் தங்கள் Wallet மற்றும் UPIகளை பயன்படுத்தி பிளிப்கார்ட்டில் சலுகைகளை பெறலாம். வாடிக்கையாளர்கள் 'பிக் பில்லியன் நாட்களில்' ஒரே கிளிக்கில் மிகவும் குறைவான விலையில் பொருட்களை வாங்கலாம். இதற்கு காரணம், தற்போதைய கொரோனா காலத்தில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தாலும், பண்டிகைக்காலத்தில் மக்களுக்கு பொருட்களை குறைந்த விலையில் கொக்டுக்க வேண்டும் என்பதே..."


இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக, தினசரி 1.5 பில்லியன் என்ற அலவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தைகளின் அளவானது, தற்போதைய 5 டிரில்லியன் ரூபாய் என்ற அளவிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 15 டிரில்லியன் ரூபாய் என்ற அளவிற்கு உயரும்.


Big Billian Days Sale என்ற இந்த சிறப்புச் சலுகையை 6 நாட்களுக்கு Paytm அறிவித்துள்ளது
Paytm தலைவர் மதுர் தியோரா கூறுகையில், "மாறிவரும் புதிய காலகட்டத்திற்காக மில்லியன் கணக்கான இந்தியர்களை தயார்படுத்துவதே எங்கள் நோக்கம், இது ஒரு 'தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை' உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்று குறிப்பிட்டார்.
வழக்கமாகவே பண்டிகை காலத்தில் அனைவரும் பல்வேறு விதமான பொருட்களை வாங்குவார்கள்.ஆனால், இந்த ஆண்டு கொரோனா என்ற கொடுந்தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. இந்த நிலையில், ஏற்கனவே மந்தமாக இருக்கும் வணிக செயற்பாடுகளை அதிகரிக்கும் உத்திகளை வர்த்தகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை கொரோனா காலத்தில் அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21 வரை இந்த மாபெரும் சலுகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் கூடுதல் நன்மை பிளிப்கார்ட் பிளஸ் (Flipkart Plus) வாடிக்கையாளர்களுக்கு உண்டு. அவர்கள், அக்டோபர் 15 முதல் இந்த சலுகை விற்பனையை பயன்படுத்தி, பயன்பெறலாம். 


டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்


இந்த 6 நாட்களில் எஸ்பிஐ தனது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்கும். இது தவிர, பல்வேறு வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளிலும் சலுகைகள் கிடைக்கும்.


இதுவும் பயனுள்ள செய்தி | வீட்டில் உட்கார்ந்த படி பணத்தை சம்பாதிக்கப்படும் இந்த திட்டத்தில் கவனமாக இருங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR