ரேசன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் மானியம் ரூபாய் 300: யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு அனைத்து பிபிஎல் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்க புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் என்று முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தெரிவித்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து தகுதியான பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) மற்றும் ஏபிஎல் (வறுமைக் கோட்டிற்கு மேல்) ரேஷன் கார்டுதாரர்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் மானியம் வழங்குப்படும் என்று முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் வெளியான இந்த அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மானியத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
இந்த நிலையில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு மாதந்தோறும் மானியம் வழங்குவதே திட்டத்தின் நோக்கம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது யூனியன் பிரதேசத்தில் உள்ள மக்களிடையே தொடர்ந்து எல்பிஜி ஏற்றுக்கொள்ளப்படுவதையும் பயன்பாட்டையும் உறுதி செய்வதாகும், இதனால் அவர்கள் தூய்மையான சமையல் எரிபொருளுக்கு முற்றிலும் மாறலாம் மற்றும் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் புகையில்லா சமையலை உறுதி செய்யலாம்.


மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... 3 பெரிய குட் நியூஸ்!! DA, HRA மட்டுமல்ல, இதுவும் உயரும்!!


முன்னதாக, இத்திட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. லெப்டினன்ட் கவர்னர் ஜூலை 10 ஆம் அன்று இதற்கு ஒப்புதல் அளித்தார், அதைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்தது.


இந்த உத்தரவின்படி, யூனியன் பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு மேல் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு மாதம் 150 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்த மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி இந்த மானிய தொகை கவுரவ ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடையாது என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி மேற்கண்ட ரேஷன் கார்டுகளை வைத்திருக்கும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மானியத் தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. மேலும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் இம்மாதத்துக்குள் மானியத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 


இதயனிடையே பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் பெயரில் மகளிர் மேம்பாட்டு துறை இதனை செயல்படுத்துகிறது. குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலைய கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது. 21 ஆண்டுகள் கழித்து இந்த பணம் கிடைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிச்சது இரட்டை ஜாக்பாட்!! டிஏ உடன் இதுவும் ஏறும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ