UIDAI அப்டேட்: மக்களின் குடியுரிமையை அறிய இந்திய அரசு ஆதார் அட்டையை உருவாக்கியுள்ளது. ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். ஆதார் அட்டையில் 12 இலக்க தனித்துவமான அடையாள எண் உள்ளது, இது மக்கள்தொகை (குடியிருப்பு முகவரி தகவல்) மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை (புகைப்படம், கருவிழி-ஸ்கேன், கைரேகைகள்) புகைப்படத்துடன் சேமிக்கிறது. மேலும் இது UIDAI ஆல் இயக்கப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் UIDAI நாட்டின் மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குகி வருகின்றது. இதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் இலவசமாக புதுப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இது தொடர்பான முடிவை மார்ச் மாதம் UIDAI எடுத்தது. இதற்காக, நாட்டு மக்கள் myAadhaar போர்ட்டலுக்கு செல்ல வேண்டும். இதில் இலவசமாக ஆவணங்களை புதுப்பிக்கும் முறையை வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த இலவச சேவை மார்ச் 15 முதல் ஜூன் 14 வரை மட்டுமே செல்லுபடியாகும், அதன் பின்னர் ஆதார் அட்டையில் மாற்றங்கள் / திருத்தங்கள் செய்ய கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.


மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆதார் கார்டு அவசியமா? முக்கிய தகவல்!


இந்த சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே இலவசம் என்பதை ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும், அதேசமயம் நீங்கள் கணினி மையம் மற்றும் CSC மையத்திற்குச் சென்று புதுப்பித்துக்கொண்டால், 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


இந்நிலையில் ஆதார் இலவச அப்டேட் சேவையானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் இது ஜூன் 15 வரை மட்டுமே கிடைக்கும். ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு, ஆதாரை அப்டேட் செய்ய பயனர்கள் ரூ.50 செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் எந்த ஆதார் மையத்திற்கு சென்றாலும் இதே கட்டணம் பொருந்தும். அதேபோல்  ஜூன் 14 வரை அணுக கிடைக்கும் இலவச ஆதார் அப்டேட் சேவையின் கீழ் அடையாளச் சான்று (Proof of Identity - PoI) மற்றும் முகவரிச் சான்று (Proof of Address - PoA) ஆகியவற்றை மட்டுமே புதுப்பிக்க முடியும்.


இதற்கிடையில் ஜூன் 14 வரை அணுக கிடைக்கும் இலவச ஆதார் அப்டேட் சேவையின் கீழ் அடையாளச் சான்று (Proof of Identity - PoI) மற்றும் முகவரிச் சான்று (Proof of Address - PoA) ஆகியவற்றை மட்டுமே புதுப்பிக்க முடியும்.


ஆன்லைனில் ஆதார் அட்டையை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை விரைவாக அறிந்து கொள்ளுங்கள்


*  முதலில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்நுழைய வேண்டும்.


* அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.


* அதன் பிறகு 'அப்டேட் டாகுமெண்ட்' என்பதைக் கிளிக் செய்யவும். இதில் ஆதார் அட்டை வைத்திருப்பவரின் அனைத்து தரவுகளும் தெரியும்.


* இதற்குப் பிறகு, எல்லா தரவையும் அங்கீகரிக்கவும், எல்லாம் சரியாக இருந்தால், அடுத்து கொடுக்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்யவும்.


* அதன்பிறகு, திரையில் உள்ள கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து, குடியிருப்பாளர் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


* இதற்குப் பிறகு, உங்கள் ஆவணங்களின் நகலை பதிவேற்றவும்.


* புதுப்பித்த பிறகு, அனைத்து தகவல்களையும் UIDAI இணையதளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.


மேலும் படிக்க | வந்தே பாரத் ரயில்களின் புதிய பதிப்புகள் விரைவில்! இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ