Aadhaar Update கோரிக்கை மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா? இதுதான் காரணம்

Aadhaar Update:ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதாரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ வழங்குகிறது.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2023, 06:27 PM IST
  • ஆதாரில் புதுப்பித்தல் அல்லது திருத்தத்திற்கான படிவத்தை உள்ளிடும்போது, ​​படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் .
  • எந்த விவரமும் முழுமையடையாமல் இருக்கக்கூடாது.
  • அதில் எந்த தவறும் இருக்கக்கூடாது.
Aadhaar Update கோரிக்கை மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா? இதுதான் காரணம் title=

Aadhaar Update: ஆதார் அட்டையின் வரம்பும் பயன்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அரசுப் பணிகளுக்கான ஆவணமாக இருந்தாலும் சரி, அல்லது வேறு சில சேவைகளுக்கான அங்கீகாரமாக இருந்தாலும் சரி, ஆதார் அட்டை நம் அடையாளத்தின் பெரிய ஆவணமாக மாறிவிட்டது. ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக அறிமுகம் செய்யப்பட்டு நீண்ட நேரம் கடந்துவிட்டாலும், இது தேவைக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதாரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ வழங்குகிறது. ஆனால் இதற்கும் சில வழிகாட்டுதல்கள் உள்ளன. 

உங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம்

சில நேரங்களில் உங்கள் ஆதார் திருத்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்படும். உங்கள் தரப்பிலிருந்தும் சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாமல் இருப்பதுதான் அதற்கு காரணம். உங்கள் ஆதாரில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், UIDAI தகவலைச் சரிபார்க்க சில நிபந்தனைகளைப் பின்பற்றுகிறது. இந்தத் தகவல் புதுப்பிக்கப்படும்போதுதான் UIDAI அதன் கணினித் தகவலைப் புதுப்பிக்கிறது.

ஆதாரை புதுப்பிக்கும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளவும்:

1. ஆதாரில் புதுப்பித்தல் அல்லது திருத்தத்திற்கான படிவத்தை உள்ளிடும்போது, ​​படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். எந்த விவரமும் முழுமையடையாமல் இருக்கக்கூடாது, அதில் எந்த தவறும் இருக்கக்கூடாது.

2. சரிபார்ப்புக்காக (வெரிஃபிகேஷன்), படிவத்துடன் சில ஆவணங்கள் உங்களிடம் கேட்கப்படுகின்றன. அவற்றை நீங்கள் கொடுக்க வேண்டும். இவற்றை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

3. படிவத்துடன் அனுப்பப்படும் ஆவணங்கள் சுய சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

4. படிவத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் சரிபார்ப்புக்காக வழங்கப்பட்ட ஆவணங்களுடன் பொருந்தவில்லை என்றாலும், உங்கள் கோரிக்கை தோல்வியடையும்.

இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்றின் காரணமாக உங்கள் புதுப்பிப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், உங்கள் படிவத்தில் உள்ள தவறைச் சரிசெய்து, சரியான சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் புதிய கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

ஆதார் புதுப்பிப்பு ஏன் அவசியம்?

உங்களுக்கான பல வகையான சேவைகளுக்கு ஆதார் அவசியம் ஆகிறது. உங்களின் தனிப்பட்ட தகவலை சரிபார்ப்பதற்கும் ஆதார் அவசியமான ஒரு ஆவணமாக உள்ளது. ஆகையால் ஆதார் புதுப்பிப்பு அவசியம். அரசு மற்றும் அரசு சாரா சேவைகள், மானியப் பலன்கள், ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, சமூகப் பலன்கள், வங்கிச் சேவைகள், காப்பீட்டுச் சேவைகள், வரிவிதிப்புச் சேவைகள், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற பல்வேறு சேவைகளுக்கு ஆதாரை பயன்படுத்த, CIDR (Central Identities Data Repository) இல் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் தரவு துல்லியமாகவும் புதுப்பிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். 

மேலும் படிக்க | உங்கள் ஆதார் மூலம் எத்தனை சிம் கார்ட் வாங்கப்பட்டுள்ளது? கண்டுபிடிக்க வழிகள்!

ஆதாரை புதுப்பிக்கும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

- முதலில், உங்கள் படிவத்தை சரியான விவரங்களுடன் சரியாக நிரப்ப வேண்டும். தேவையான சுய சான்றளிக்கப்பட்ட படிவங்கள் அதனுடன் இணைக்கப்பட வேண்டும்.

- புதுப்பிப்பு படிவத்தில் உங்கள் விவரங்களை பெரிய எழுத்துக்களில் நிரப்பவும். தகவல் ஆங்கிலம் அல்லது உள்ளூர் மொழியில் உள்ளிடப்பட வேண்டும்.

- அட்டைதாரரின் பெயரை எழுதும் போது எந்த பதவி/தலைப்பையும் பயன்படுத்த வேண்டாம்.

- தேவையான ஆவணங்களை மட்டும் அனுப்பவும்.

- உங்கள் URN ஐப் பாதுகாப்பாக வைத்திருங்கள், இதன் மூலம் உங்கள் கார்டின் புதுப்பிப்பு நிலையைச் சரிபார்க்கலாம்.

- உங்களிடம் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண் இல்லையென்றால், முதலில் ஆஃப்லைனுக்குச் சென்று அதைப் புதுப்பிக்கவும் அல்லது ஆதாரை ஆஃப்லைனில் புதுப்பிக்கவும்.

- ஆதார் அட்டை புதுப்பிப்பு கோரிக்கையில், புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை வர வேண்டிய சரியான முகவரியை உள்ளிடவும். இதன் மூலம் ஆதார் சரியான இடத்திற்கு வந்து அதை நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பெற முடியும். 

மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் நம்பர் நியாபகம் இல்லையா? ஆன்லைனில் எளிதாக பெறலாம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News