எல்பிஜி கேஸ் சிலிண்டர், இன்றைய விலை நிலவரம்: புதிய நிதியாண்டு தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டது. புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து பலர் புதிய விதிகள்(புதிய விதிகள்) அமலுக்கு வந்துள்ளன. இப்போது மே மாதம் முடிந்து ஜூன் மாதம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் சில புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி மாதத்தின் முதல் நாளான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளன. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி அதாவது மாத்தின் முதல் நாளான இன்று எல்பிஜி சிலிண்டர் விலையில் பெரிய அளவில் குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை வணிக கேஸ் சிலிண்டர்களின் அரசு எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளன. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலையானது ரூ.83 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக சிலிண்டரின் விலையானது தற்போது ரூ.1937 என விலை நிர்ணையம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன், விமான எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கட்டணங்கள் ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை முதல் அமலுக்கு வந்தன
அதேபோல் எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருளின் விலையையும் குறைத்துள்ளது. அதன்படி இந்த விலையில் சுமார் ரூ.6,600 குறைப்பு ஏற்பட்டுள்ளது. இது இனி வரும் காலங்களில் விமானப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன்படி இதன் காரணமாக இனி வரும் காலங்களில் விமானக் கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த புதிய கட்டணங்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. மறுபுறம் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வணிக கேஸ் சிலிண்டரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள்! அகவிலைப்படி உயர்வு 31 அல்ல 35%


வணிக எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்
இந்த நிலையில் டெல்லியில் கேஸ் சிலிண்டர் ரூ.1856.50ல் இருந்து ரூ.1773 ஆக குறைந்துள்ளது. கொல்கத்தாவில், முன்பு ரூ.1960.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.1875.50 செலுத்த வேண்டும். இதேபோல், முன்பு மும்பையில் ரூ.1808.50க்கு இருந்த சிகிண்டரின் விலை தற்போது ரூ.1725க்கு கிடைக்கும். சென்னையை பொறுத்த வரை ரூ.2021.50ல் இருந்து ரூ.1937 ஆக குறைந்துள்ளது சிலிண்டரின் விலை.


ATF விலையில் பெரும் குறைப்பு
எல்பிஜி தவிர, எண்ணெய் நிறுவனங்களும் ATF விலையையும் கடுமையாகக் குறைத்துள்ளன. அதன்படி ஒரு கிலோ லிட்டர் ரூ.6600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏடிஎஃப் விலை டெல்லியில் கிலோ லிட்டர் ரூ.95935.34 ஆகவும், மும்பையில் ரூ.89348.60 ஆகவும், கொல்கத்தாவில் கிலோ லிட்டர் ரூ.102596.20 ஆகவும், சென்னையில் கிலோ லிட்டர் ரூ.99828.54 ஆகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விமான டிக்கெட்டுக்களின் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 376வது நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலை நீடித்து வருகிறது. அதன்படி சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை குறையாத காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க | PPF -ல் பணம் போடுகிறீர்களா? உங்களுக்கு தான் இந்த முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ