மகிழ்ச்சியில் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள்! அகவிலைப்படி உயர்வு 31 அல்ல 35%

Karnataka Government DA Hike: அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தியது கர்நாடக அரசு

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 31, 2023, 10:44 PM IST
  • கர்நாடக மாநில அரசின் அதிரடி அறிவிப்பு
  • கர்நாடகாவில் அகவிலைப்படி 31இல் இருந்து 35 சதவீதமாக உயர்ந்தது
  • ஆட்சிக்கு வந்த ஒரு வாரத்திலேயே அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு
மகிழ்ச்சியில் கர்நாடக மாநில அரசு ஊழியர்கள்! அகவிலைப்படி உயர்வு 31 அல்ல 35% title=

Dearness Allowance By Karnataka Govt: கர்நாடக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) 31 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். மேலும், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை, அடிப்படை ஓய்வூதியத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள், தற்போதுள்ள 31 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக அதிகரிக்கும், இந்த உயர்வு 2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும்,” என்று கர்நாடக அரசு மே 30 தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மாநில அரசு மற்றும் அரசின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து ஓய்வூதியம் பெறும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 35 சதவீத உதவித்தொகையை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க | Pension Scheme: ஓய்வூதியத்தில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்! மத்திய அரசு திட்டம்!

முழுநேர அரசு ஊழியர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள், வழக்கமான ஊதிய விகிதத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வழக்கமான ஊதிய விகிதத்தில் உள்ள உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் முழுநேர ஊழியர்கள் ஆகியோருக்கு இவை பொருந்தும். "யுஜிசி/ஏஐசிடிஇ/ஐசிஏஆர்/என்ஜேபிசி ஊதிய விகிதங்கள் மற்றும் என்ஜேபிசி ஓய்வூதியதாரர்கள் தொடர்பாகவும் தனி ஆணைகள் வழங்கப்படும்" என்று அரசாங்கம் கூறியுள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியமைத்த ஒரு வாரத்தில், மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த ஜாக்பாட் DA செய்தியை காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த திட்டங்களை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி

அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் (க்ருஹ ஜோதி), ஒவ்வொரு குடும்பத்தின் தலைவிக்கும் ரூ. 2,000 மாதாந்திர உதவி (கிருஹ லட்சுமி), வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம் என வாக்குறுதி அளித்திருந்தது (அன்ன பாக்யா).

மேலும், 18-25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 மற்றும் வேலையில்லாத டிப்ளமோ பெற்றவர்களுக்கு ரூ.1,500 (யுவநிதி), மற்றும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கு பெண்களுக்கு இலவசப் பயணம் (சக்தி).

மேலும் படிக்க | CSK Equalls MI: மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் பட்டம் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே! 

திங்கள்கிழமை, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி அறிவித்த உத்தரவாதங்களை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நிதி, போக்குவரத்து, உணவு மற்றும் சிவில் சப்ளை, எரிசக்தி மற்றும் பிற துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி, உத்தரவாதங்களை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

உத்திரவாத திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து அமைச்சர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்துவார் என முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும்.

இன்றைய கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வந்திதா சர்மா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று உத்தேச உத்திரவாதங்களை அமல்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர். காங்கிரஸ் அரசாங்கம் தனது 5 தேர்தல் உத்தரவாதங்களை நிறைவேற்றும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

மேலும் படிக்க | அரசின் இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News