மக்களுக்கு நல்ல செய்தி... பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
Petrol Diesel Price Cut Down: மக்களவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவைக்கு லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
Petrol Diesel Price Cut Down: மக்களவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவைக்கு லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியம் அமைச்சகம் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு குறித்து கூறுகையில், இதன்மூலம் நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம், டீசலில் இயங்கும் 58 லட்சத்திற்கும் மேலான கனரக வாகனங்களும், பெட்ரோலில் இயங்கும் 6 கோடிக்கும் அதிகமான கார்கள் மற்றும் 27 கோடிக்கும் அதிகமான இருச்சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வைத்திருப்போருக்கான இயக்கும் செலவு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளை விட குறைவு
மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே மத்திய அரசு இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த விலை குறைப்புக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் எரிபொருளின் விலை குறைவுதான் எனவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, அவர் இந்தியாவின் எரிபொருள் விலையை இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பிட்டு, அவை சுமார் 50 முதல் 79% சதவீதம் வரை அதிகம் எனவும் கூறினார்.
நாளை முதல் அமல்
மத்திய அரசின் இந்த விலை குறைப்பு நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து ஒவ்வொரு நகரத்திலும் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். அதற்கான போக்குவரத்து கட்டணம், மற்ற வரிகள் சேர்ந்த அந்த கட்டணத்தில் எதிரொலிக்கும். அந்த வகையில், முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசலின் விலையை இங்கு காணலாம்.
பெட்ரோல் விலை
தலைநகர் டெல்லியில் 96.72 ரூபாயை விற்கப்பட்ட பெட்ரோல் 94.72 ரூபாயாக குறைந்துள்ளது. மும்பையில் 106.31 ரூபாயாக இருந்த பெட்ரோல் 104.21 ஆக குறைந்துள்ளது. கொல்கத்தாவில் 106.3 ரூபாயாக இருந்த பெட்ரோல் 103.94 ஆக குறைந்துள்ளது. சென்னையில் 102.63 ஆக இருந்த பெட்ரோல் 100.75 ஆக குறைந்துள்ளது.
டீசல் விலை
தலைநகர் டெல்லியில் டீசல் விலை 89.62 ரூபாய் ஆக இருந்து 87.62 ரூபாய் ஆக குறைந்துள்ளது. மும்பையில் 94.27 ரூபாயாக இருந்த டீசல் 92.15 ரூபாயாகி உள்ளது. கொல்கத்தாவில் 92.76 ரூபாயில் விற்கப்படும் டீசல் 90.76 ரூபாய்க்கும், சென்னையில் 94.24 ரூபாயாக இருந்த 92.34 ரூபாயாக விற்கப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார்!! மெட்ரோ இரயில் பணிகளுக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ