Diwali Gift After DA Hike for State Government Employees: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. மத்திய அரசு முதல் பல மாநில அரசுகளும் தீபாவளி நேரத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது. இதுமட்டுமின்றி பல ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி
 
இதற்கிடையில், ராஜஸ்தானில் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான ராஜஸ்தான் அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) உயர்த்தி அறிவித்துள்ளது.


House Rent Allowance


ராஜஸ்தான் நிதித் துறையின் பட்ஜெட் செயலர் தேபாஷிஷ் பிரஸ்டி இது தொடர்பான உத்தரவை புதன்கிழமை வெளியிட்டார். இந்த உத்தரவில் வகை வாரியாக HRA அதிகரிப்பு பற்றி குறிப்பிடுகிறது. இந்த அறிவிப்பின்படி, 'Y' பிரிவு நகரங்களுக்கு 20 சதவீதமும், 'Z' வகை நகரங்களுக்கு 10 சதவீதமும் ஹெச்ஆர்ஏ உயர்த்தப்பட்டுள்ளது.' இந்த உத்தரவு நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என கூறப்படுள்ளது.


மேலும் படிக்க | Diwali Muhurat Trading: தீபாவளியன்று பங்குச்சந்தையில் நடக்கும் முகூர்த்த வர்த்தகம்.. நாள், நேரம் இதுதான்


DA Hike: 3% அகவிலைப்படி உயர்வு


சமீபத்தில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தியது. தற்போது மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50% -இலிருந்து 53% ஆக சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் இந்த முடிவால் சுமார் 15.38 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். டிஏ உயர்வு ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வரும், எனினும், ஜூலை 1 முதல் அக்டோபர் 31 வரை உயர்த்தப்பட்ட டிஏ தொகை ஜிபிஎஃப்-ல் டெபாசிட் செய்யப்படும். 


பண்டிகை காலத்தில் அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசும் பல மாநில அரசுகளும் தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளன. தீபாவளிக்கு முன்னதாகவே ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக பல மாநில அரசுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில், தமிழக அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு (DA Hke) அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் முக ஸ்டாலின் தமைமையிலான தமிழக அரசு அறிவித்தது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு 17 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதனுடன் அருணாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளன. இந்த மாநிலங்கள் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் அதிகரித்துள்ளன.


முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை போனஸ் வழங்குவதாக மோடி அரசு அறிவித்தது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையையொட்டி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்திற்கு இணையான உற்பத்தித் திறன் இணைக்கப்படாத போனஸ் (Non Productivity Linked bonus) (அட்ஹாக் போனஸ்) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | நவம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை... முழு லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ