EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இபிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கின்றது. இபிஎஃப் உறுப்பினர்களின் நன்மைக்காகவும், வசதிகளை அதிகரிக்கவும், EPFO பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, சில பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது. அந்த வகையில் புத்தாண்டு 2025 -இல் இபிஎஃப்ஓ -வில் பல வித மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள் அடுத்த ஆண்டு என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?


அனைவரும் புத்தாண்டு 2025 =க்காக காத்திருக்கின்றனர். லட்சக்கணக்கான ஊழியர்கள் PF தொடர்பான அரசின் முடிவுக்காக காத்திருக்கின்றனர். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விரைவில் PF தொடர்பான ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து, இபிஎஃப் கணக்கில் (EPF Account) இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும். 


இது தவிர, இபிஎஃப் தொகையை (EPF Amount) வித்டிரா செய்வதற்கான நீண்ட நடைமுறையும் இனி தேவையற்றதாகிவிடும். ஏடிஎம் கார்டுக்கு இணையான பிஎஃப் கார்டு அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஏடிஎம்மில் இருந்து நேரடியாக பிஎஃப் நிதியை எடுக்க முடியும். 


PF Card: அரசாங்கத்தின் உத்தி என்ன?


இது தொடர்பான விவரங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தவ்ரா தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டிற்குள் அரசாங்கம் ஏடிஎம் சேவையை துவக்கும் முனைப்புடன் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசியமற்ற செயல்முறைகளை அகற்ற இந்த முறை உதவியாக இருக்கும். 


இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) ஜனவரி 2025 முதல் PF அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காண்பார்கள் என்று சுமிதா தவ்ரா குறிப்பிடுகிறார். IT 2.1 அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், EPFO ​​உறுப்பினர்கள் ஏடிஎம்களில் இருந்து நேரடியாக பணத்தை எடுக்கும் வசதி அவர்களுக்கு கிடைக்கும். 


தற்போது பிஎஃப் தொகையை எடுப்பதற்கான வழிமுறை என்ன? பிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்தவுடன், அது நமது கணக்கில் வரவு வைக்கப்பட எவ்வளவு நேரம் ஆகும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக் குழுவுக்கு பதில் இனி ஒவ்வொரு ஆண்டும் சம்பள திருத்தமா?


EPFO Withdrawal Rules: தற்போது இபிஎஃப் தொகையை எடுப்பதற்கான செயல்முறை என்ன?


- தற்போது, ​​EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் தொகையை பெற நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். 
- அதே நேரத்தில், அதன் செயல்முறைக்கும் குறிப்பிடத்தக்க அளவு நேரம் தேவைப்படுகிறது. 
- பணத்தை எடுக்க, EPFO ​​போர்ட்டலுக்குச் சென்று, UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின்னர் லாக் இன் செய்யவும்.
- இதைத் தொடர்ந்து, உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும். 
- ஆன்லைன் சேவைகளை அணுகும்போது க்ளெய்ம் விருப்பம் காண்பிக்கப்படும்.
- அதைக் கிளிக் செய்தவுடன், ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- முதலில் PF கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதில் நீங்கள் எவ்வளவு தொகையை எடுக்க விரும்புகிறீர்கள், எந்தக் காரணத்திற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, காசோலை அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்ற ஒரு விருப்பம் இருக்கும். 
- அதைப் பதிவேற்றி உங்கள் க்ளெய்மை சப்மிட் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு, குறைந்தது 3 நாட்கள் மற்றும் அதிகபட்சமாக 8 நாட்களில் உங்கள் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.


மேலும் படிக்க |  SIP Calculator: ரூ.10,000 பரஸ்பர நிதிய முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் ஃபார்முலா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ