PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: EPF Claim விதிகளில் மாற்றம், இனி பிஎஃப் தொகையுடன் அதிக வட்டி கிடைக்கும்

EPFO Upate: தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள். இது அவர்களுக்கு அதிக நிதிப் பலன்களை அளிக்கும். மேலும் க்ளைம் செயல்முறையும் இதனால் இனி வேகமாக நடக்கும். 30 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டத்தில் இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய விதிகளின்படி, இபிஎஃப் சந்தாதாரர்களின் க்ளெய்ம் கோரிக்கை மாதத்தின் 24 ஆம் தேதிக்குள் தீர்க்கப்பட்டால், முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்பட்டது. இப்போது, ​​க்ளைம் செட்டில்மென்ட் தேதி வரை உறுப்பினர்களுக்கு வட்டியின் பலன் கிடைக்கும்.

1 /9

EPFO -வின் லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. க்ளெய்ம் செட்டில்மெண்ட் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO ​​விதிகளை மாற்றியுள்ளது. இதனால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நன்மை ஏற்படும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /9

1952 EPF திட்டத்தின் பத்தி 60(2)(b) இல் முக்கியமான திருத்தத்தை CBT அங்கீகரித்துள்ளது. முந்தைய விதிகளின்படி, இபிஎஃப் சந்தாதாரர்களின் க்ளெய்ம் கோரிக்கை மாதத்தின் 24 ஆம் தேதிக்குள் தீர்க்கப்பட்டால், முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்பட்டது. இப்போது, ​​க்ளைம் செட்டில்மென்ட் தேதி வரை உறுப்பினர்களுக்கு வட்டியின் பலன் கிடைக்கும்.

3 /9

புதிய விதிகளை அமல்படுத்த இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லைய். அரசிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும் வரை, பழைய விதிகளின் படியே க்ளெய்ம்கள் செட்டில் செய்யப்படும்.  

4 /9

தற்போது முன்மொழியப்பட்டுள்ள இபிஎஃப் க்ளெய்ம் (EPF Claim) விதிகள் மூலம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும். அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

5 /9

நிதி நன்மைகள் அதிகரிக்கும்: இந்த மாற்றத்தின் மூலம் க்ளைம் செட்டில்மென்ட் ஆகும் வரை, அந்த முழு காலத்திற்கும், EPF உறுப்பினர்களுக்கு வட்டி கிடைக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

6 /9

புகார்கள் குறையும்: வட்டி கணக்கீட்டில் உள்ள வேறுபாடுகள் நீக்கப்படுவதால், உறுப்பினர்கள் வட்டி இழப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறையும். இதனால் இபிஎஃப் உறுப்பினர்களின் பிரச்சனைகள் தீரும்.

7 /9

க்ளெய்ம் செட்டில் செய்யப்படும் செயல்முறை வேகமெடுக்கும்: புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு மாதத்திற்குள் க்ளெய்ம்கள் செட்டில் செய்யப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

8 /9

சீரான வளப் பயன்பாடு: இந்த மாற்றத்தின் மூலம் EPFO கிளெய்ம்களை மிகவும் திறமையாகச் செயல்படுத்த அதிக சாத்தியக்கூறுகள் உருவாகின்றன. இது இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான சிறந்த சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும்.

9 /9

இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு இபிஎஃப்ஓ -வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.