Budget 2024: பொது வருங்கால வைப்பு நிதியில் (Public Provident Fund) முதலீடு செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரவுள்ளது. நாட்டின் பொது பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனினும், அடுத்த ஆண்டில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ளதால், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். இருப்பினும் சில முக்கிய அறிவிப்புகளும் இதில் வெளியிடப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிபிஎஃப் முதலீட்டு வரம்பு (PPF Investment Limit): 


இந்த முறை பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் (Nirmala Sitharaman) முதலீட்டாளர்களை மகிழ்விக்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. குறிப்பாக வரி செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். இவர்களது வரிச்சுமையைக் குறைக்க பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். இது தவிர முதலீட்டு விஷயத்திலும் நல்ல வாய்ப்புகள் அளிக்கப்படலாம். மொத்தத்தில், முதலீட்டாளர்கள் பட்ஜெட் 2024ல் இருந்து இரட்டிப்பு பலன்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


பட்ஜெட் 2024 -க்கான (Budget 2024) ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இது ஒரு தேர்தல் ஆண்டு என்பதால் வழக்கமான எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. எனினும், வரி செலுத்துவோருக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது. இந்த முறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PPF இல் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது முதலீட்டாளர்களுக்கு பலன் அளிப்பது மட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் மீதான சுமையையும் குறைக்கும். மேலும், முதலீட்டு சந்தையில் இதனால் ஒரு பெரிய ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்படும். 


முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்


ஒரு நிதியாண்டில் பிபிஎஃப்-ல் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு விலக்கு உண்டு. இதற்கு வரிவிலக்கும் உண்டு. மேலும் அரசாங்கம் 7.1% விகிதத்தில் வருமானத்தை வழங்குகிறது. இந்த முறை பட்ஜெட்டில் பிபிஎஃப் முதலீட்டின் வரம்பு அதிகரிக்கப்படலாம். தற்போதைய முறைப்படி, ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், அதில் வரி விலக்கு கிடைக்கும். இது 3 லட்சமாக அதிகரிக்கப்படக்கூடும். அதாவது முதலீட்டாளர் ரூ. 3 லட்சம் வரை வரி இல்லாமல் முதலீடு செய்வதற்கான விருப்பத்தைப் பெறலாம். இது முழுத் தொகையிலும் வருமானம் ஈட்ட உதவும். 


கடந்த பல ஆண்டுகளாக பிபிஎஃப் வட்டி விகிதத்தில் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடையாத வகையில் அவர்களுக்கு வேறு வழிகளில் பலன்கள் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


PPF வரம்பை அதிகரிப்பதன் மூலம் என்ன நடக்கும்?


PPF இன் முதலீட்டு வரம்பை அதிகரிப்பதால் இரண்டு நன்மைகள் கிடைக்கும். 


- முதலில், திட்டத்தின் மீதான கவர்ச்சி வேகமாக அதிகரிக்கும். இப்போது வரை இந்த திட்டம் மிகவும் பிரபலமாகவும் சூப்பர்ஹிட்டாகவும் உள்ளது. முதலீட்டு வரம்பை அதிகரிப்பது இதற்கான ஈர்ப்பை இன்னும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். 


- இரண்டாவதாக, முதலீட்டின் அளவு அதிகமாக இருந்தால், வங்கிகள் மற்றும் அரசாங்கத்தில் வைப்புத்தொகை அதிகரிக்கும். இதன் பலனை மற்ற துறைகளுக்கும் கொடுக்கலாம். இது தவிர, வரம்பை இரட்டிப்பாக்குவதன் மூலம் பிபிஎஃப் முதலீட்டாளர்கள் (PPF Investors) இரட்டிப்பு பலன்களைப் பெறுவார்கள். சேமிப்பும் அதிகமாக இருக்கும், மேலும் அதில் கிடைக்கும் வட்டியும் அதிகமாக இருக்கும்.


மேலும் படிக்க | பங்குச் சந்தையில் உச்சத்தை எட்டும் அதானியின் குழுமம்! பசுமை எரியாற்றலுக்கு ஜே!


உள்நாட்டு சேமிப்பின் பங்கு அதிகரிக்கும்


PPF ஒரு நல்ல, பாதுகாப்பான திட்டமாக இருப்பதுடன் ஒரு வரி சேமிப்பு திட்டமாகவும் உள்ளது. இது வரி செலுத்துவோருக்கு சிறந்த வருமானத்தை அளிக்கிறது. PPF இல் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு பல ஆண்டுகளாக மாறவில்லை. 2023 பட்ஜெட்டில் இது நடந்தால், பிபிஎஃப் முதலீட்டின் வரம்பை அதிகரிப்பது ஜிடிபியில் உள்நாட்டு சேமிப்பின் பங்கை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது வரி செலுத்துவோர் மற்றும் அரசாங்கத்திற்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும்.


PPF முதலீட்டாளறை இந்த வழியில் கோடீஸ்வரராக்கும்


பிபிஎஃப் முதலீட்டு வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டால், நீண்ட கால இலக்குகளுக்காக மக்கள் பணத்தைச் சேமிக்க உதவும். திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் கோடீஸ்வரர்களாக மாறுவது எளிதாகிவிடும். 20 ஆண்டுகளுக்கு (பிபிஎஃப் முதலீடு) ஒவ்வொரு ஆண்டும் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால், எந்த ஒரு சாமானியனும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1.33 கோடிக்கு உரிமையாளராக முடியும். தற்போது பிபிஎஃப் வட்டி விகிதம் (PPF Interest Rate) 7.1% ஆக உள்ளது. வட்டிக்கு அரசு உத்தரவாதம் உள்ளது மற்றும் இதில் வரி விலக்கும் உண்டு.


மேலும் படிக்க | புதிய வரி விதிப்பிலிருந்து பழைய வரி விதிப்புக்கு மாற முடியுமா? இதனால் என்ன லாபம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ