Budget 2024: வருமான வரி அடுக்கில் மாற்றமா? வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய அப்டேட்

Old Tax Regime vs New Tax Regime: வரும் ஆண்டில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, வருமான வரி அடுக்குகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிதியாண்டு முடிவதற்குள், புதிய மற்றும் பழைய வரி அடுக்கு விகிதங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 22, 2023, 10:24 AM IST
  • புதிய வரி விதிப்பில் உள்ள நன்மைகள் என்ன?
  • முதலீட்டுக்கு வரி விலக்கு கிடைக்கும்.
  • 87A இல் தள்ளுபடி அதிகரித்துள்ளதா?
Budget 2024: வருமான வரி அடுக்கில் மாற்றமா? வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய அப்டேட் title=

Old Tax Regime vs New Tax Regime: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆனால், இது தேர்தல் ஆண்டு என்பதால் இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். தேர்தல் ஆண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைக்கப்படும் புதிய அரசாங்கம் முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. இது வழக்கமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட்டில் (Budget 2024) வரி விலக்கு போன்ற அறிவிப்புகளுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி விதிப்புகளில் சில மாற்றங்களைச் செய்தார். வரும் ஆண்டிலும், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, வருமான வரி அடுக்குகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிதியாண்டு முடிவதற்குள், புதிய மற்றும் பழைய வரி அடுக்கு விகிதங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய Vs பழைய வருமான வரி முறை (New Tax Regime Vs Old Tax Regime)

எந்த வரி அடுக்கு உங்களுக்கு எற்றது? (Which tax slab is right for you?)

நிதியாண்டின் தொடக்கத்தில் வரி அடுக்கு (Tax Slab) தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஏதேனும் தவறு நடந்தால், நிதியாண்டின் இறுதியில் திருத்தம் செய்ய நேரம் உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், புதிய மற்றும் பழைய அடுக்குகள் குறித்து ஏதேனும் குழப்பம் இருந்தால், இப்போது அதை புரிந்து கொள்ளலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்த ஸ்லாப் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.

புதிய வரி விதிப்பில் உள்ள நன்மைகள் என்ன? (New Tax Regime Benefits)

2023 பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, புதிய வரி விதிப்பில் (New Tax Regime), 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்துவோருக்கு வரி இல்லை. இந்த வருமான வரம்பில் உள்ளவர்களுக்கு புதிய வரி விதிப்பு ஒரு நல்ல வழியாக இருக்கும். ஏனெனில், ரூ.7 லட்சம் வருமானம் தவிர, ரூ.50 ஆயிரம் நிலையான விலக்கு அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்ஷனும் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, 7 லட்சத்து 50 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியதில்லை.

புதிய வரி முறையில் உள்ள வரி அடுக்குகள் (Tax slabs in the New Tax Regime)

- ₹3 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை
- ₹3-6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி (பிரிவு 87A இன் கீழ் வரி தள்ளுபடி)
- ₹6-9 லட்சம் வரை வருமானத்திற்கு 10% வரி
– ₹9- ₹12 லட்சம் வருமானத்திற்கு 15% வரி
- ₹12-15 லட்சம் வருமானத்திற்கு 20% வரி
- ₹15 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரி

மேலும் படிக்க | LPG Cylinder Price: குட் நியூஸ்!! குறைந்தது எல்பிஜி சிலிண்டர் விலை.... இன்று முதல் புதிய விலை

பழைய வரி முறையில் உள்ள வரி அடுக்குகள் (Tax slabs in the Old Tax Regime)

- ₹2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு அடிப்படை விலக்கு வரி விலக்கு கிடைக்கும்
- ₹2.5 முதல் ₹5 லட்சம் வரை வருமானத்திற்கு 5 சதவீத வரி
- ₹5 லட்சம் முதல் ₹7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீத வரி
- ₹7.5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை வருமானத்திற்கு 20 சதவீதம் வரி
- ₹10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

முதலீட்டுக்கு வரி விலக்கு கிடைக்கும் (Tax exemption on investment)

பழைய வரி அடுக்குகளில் (Old Tax Regime) முதலீடுகளில் வரி விலக்கு பெற வாய்ப்பு உள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் வரிவிலக்கு பெறலாம். இதில், 80சி, 80டி போன்ற பிரிவுகளில் முதலீடு செய்தால் வரிவிலக்கு உண்டு. வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடனை செலுத்தும் வரி செலுத்துவோருக்கு, பழைய வரி முறையே இன்னும் சிறப்பாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

87A இல் தள்ளுபடி அதிகரித்துள்ளதா?

கடந்த பட்ஜெட்டில், 7 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு, 87ஏ பிரிவின் கீழ் கிடைக்கும் தள்ளுபடி உயர்த்தப்பட்டது. ரூ.5 லட்சம் வரிச்சலுகை ரூ.12500க்கு கிடைத்தது, ரூ.7 லட்சம் வருமானத்தில் ரூ.25000 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது, புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோர் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு குட் நியூஸ்: 5% டிஏ ஹைக்கை நோக்கி செல்லும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News