ஓய்வூதிய உயர்வு புதுப்பிப்பு: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நீங்களும் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால், மத்திய அரசால் உங்களுக்கு ஒரு சிறப்பு வசதி அளிக்கப்படுகிறது. அதை பயன்படுத்திக் கொண்டால், அதன் பிறகு நீங்கள் ஒவ்வொரு மாதமும் பெறும் பணம் அதிகரிக்கும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பயன் பெற நினைப்பவர்கள் ஜூன் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. அதாவது, உங்கள் கணக்கில் அதிகப் பணம் வேண்டுமானால், அதிக ஓய்வூதியம் பெற வேண்டுமானால், இதற்காக விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதில், இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.


இபிஎஃப்ஓ இந்த தகவலை அளித்தது 


இது குறித்து தகவல் அளித்த இபிஎஃப்ஓ, அதன் ஊழியர்கள் எந்த விதமான பிரச்சனையையும் சந்திக்காமல் இருக்கும் வண்ணம் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உயர் ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 4, 2022 அன்று, உயர் ஓய்வூதியம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. இதற்காக, நான்கு மாதங்களுக்குள் புதிய விருப்பத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.


மொத்த தொகையின் அளவு குறையலாம்


நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் மொத்த தொகையில் அளவு குறையக்கூடும். ஆனால் உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும். இந்த திட்டத்தில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் உள்ளன என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இன்னும் சில ஆண்டுகளே பணிக்காலம் உள்ள ஊழியர்களின் கவனம் மொத்தத் தொகையில் இருக்க வேண்டும்.


அதிக ஓய்வூதியத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது


- அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் இ-சேவா போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.


- அதன் பிறகு பென்ஷன் ஆன் ஹையர் சாலரி (Pension on Higher Salary) என்பதைக் கிளிக் செய்யவும்.


- இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்தை அடைவீர்கள். அங்கு நீங்கள் 2 விருப்பங்களைக் காண்பீர்கள்.


- செப்டம்பர் 1, 2014 க்கு முன் ஓய்வு பெறுபவர்கள் முதல் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.


- இதைத் தவிர, நீங்கள் இன்னும் அந்த பணியில் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் இரண்டாவது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


- UAN, பெயர், பிறந்த தேதி, ஆதார், மொபைல் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.


- இப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும், அதை உள்ளிட வேண்டும்.


மேலும் படிக்க | EPS Higher Pension: அரசு ஊழியர்கள் உச்சகட்ட குஷி... இந்த மாதம் முதல் உயரும் ஓய்வூதியம்!


கடந்த வாரம், 2014ல் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டது.


இபிஎஃப்ஓ கடந்த வாரம் அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) (Employees’ Pension Scheme - EPS)கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் / நிறுவனங்களும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. நவம்பர் 2022 இல், உச்ச நீதிமன்றம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 2014 ஐ உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, ஆகஸ்ட் 22, 2014 இன் இபிஎஸ் திருத்தம், ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியது. மேலும், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் தங்கள் உண்மையான சம்பளத்தில் 8.33 சதவீதத்தை இபிஎஃஸ் -க்கு பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக இபிஎஃப்ஓ தனது கள அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | VPF Withdrawal Rules: இதற்கான வழிமுறை என்ன? முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ