8th Pay Commission அட்டகாசமான செய்தி: ஊழியர்களின் ஊதியம் 44% உயரும்
8th Pay Commission: ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.67 மடங்கு அதிகரிக்கப்படலாம். இதனுடன் குறைந்தபட்ச சம்பளத்தை அரசு 44.44 சதவீதம் அதிகரிக்கலாம்.
8வது ஊதியக் குழு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாபெரும் செய்தி!! நீங்கள் ஒரு மத்திய ஊழியராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கிய செய்தியாக இருக்கும். மிக விரைவில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
8வது ஊதியக் குழு குறித்த நல்ல செய்தியை மிக விரைவில் அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, 2024 தேர்தலுக்குப் பிறகு புதிய சம்பள கமிஷன் அமைக்கப்படலாம். இதில், ஊழியர்களின் சம்பளத்துடன் அகவிலைப்படியும் உயர்த்தப்படலாம்.
அதேநேரம், இந்த ஆண்டு 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு வெளியானால், வரும் ஆண்டில் அது அமல்படுத்தப்படும் எனவும் செய்திகள் வருகின்றன. அதாவது 2026ஆம் ஆண்டுக்குள் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது
2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும்
அதே நேரத்தில், தற்போது ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் சம்பளம் பன்மடங்கு உயரும். இதனுடன், ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கப்படலாம்.
8வது ஊதிக்குழுவை அரசு அமல்படுத்தினால், அரசு சம்பளத்தை உயர்த்தும். இதில்,ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.67 மடங்கு அதிகரிக்கப்படலாம். இதனுடன் குறைந்தபட்ச சம்பளத்தை அரசு 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். இதன்படி ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரமாக அதிகரிக்கும்.
தேர்தலுக்கு முன் நல்ல செய்தி வரலாம்
8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் வரும் ஆண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு அருமையான பரிசை வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.
ஊதியக்குழுக்கள்
1947 முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
24 பிப்ரவரி 2014 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், ஆறாவது மற்றும் ஏழாவது ஊதியக் குழுக்கள், மத்திய ஊழியர்களின் சம்பளத்தை பெரிய அளவில் உயர்த்த பரிந்துரை செய்திருந்தன. அதை ஏற்று அரசுகளும் அரசாங்கத்தின் சம்பளத்தை உயர்த்தின.
தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும்
தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ