மாயமாய் மறைந்த ரூ.2000 நோட்டுகள்!! இனி இவை செல்லாதா?
2000 Rupee Notes: சாமானியர்கள் கண்ணில் 2000 ரூபாய் நோட்டு இந்நாட்களில் படுவதே இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அளவுக்கு 2000 ரூபாய் நோட்டு பற்றிய மர்மம் அதிகரித்து வருகின்றது.
‘2000 ரூபாய் நோட்டு இல்லையா?’, ‘என்னப்பா ஏடிஎம்-ல ரூ.2000 வரவே மாட்டேங்குது?’, ‘இனி 2000 ரூபாய் நோட்டு செல்லுபடியாகாதா?’ .. இப்படிப்பட்ட கேள்விகள் இந்நாட்களில் அதிகமாகிவிட்டன. இப்போதெல்லாம் 2000 ரூபாய் நோட்டு பற்றி அதிகம் பேசப்படுகிறது. முக்கியமாக, சாமானியர்கள் கண்ணில் இந்த நோட்டு இந்நாட்களில் படுவதே இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அளவுக்கு 2000 ரூபாய் நோட்டு பற்றிய மர்மம் அதிகரித்து வருகின்றது. அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் மூலம் 2000 ரூபாய் நோட்டு காணப்படாததன் காரணம் சற்று தெளிவாகிறது. எனினும், இந்த நோட்டு தடை செய்யப்படுமா என்பது குறித்து அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளான டிசம்பர் 12 ஆம் தேதி, மாநிலங்களவையில், பா.ஜ.க, எம்.பி., சுஷில் குமார் மோடி, 2,000 ரூபாய் நோட்டு பிரச்னையை எழுப்பினார். 1000 ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 2000 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறினார். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இதையும் தடை செய்ய வேண்டும் என அவர் கூறினார். 2000 நோட்டு இனி சந்தையில் காணப்படாது என்றும் அவர் தெரிவித்தார். 2000 ரூபாய் நோட்டு இனி சட்டப்பூர்வ ரூபாய் நோட்டாக இருக்காது என்ற வதந்தி தற்போது பரவியுள்ளது. இது தொடர்பான நிலைப்பாட்டை அரசு இப்போது தெளிவுபடுத்த வேண்டும் என பல கட்சிகள் கேட்டு வருகின்றன.
பா.ஜ.க, எம்.பி., சுஷில் மோடி கூறியதை அடுத்து, 2000 நோட்டு உண்மையில் தடை செய்யப்பட்டுவிட்டதா என்ற விவாதமும், பரபரப்பாக நடந்தது. இந்த நோட்டுகளை இப்போது சந்தைகளில் அரிதாகவே பார்க்க முடிகின்றது. ஏடிஎம் மற்றும் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் உண்மையாகவே தடை செய்யப்பட்டு விட்டதா? இதைப் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
2000 ரூபாய் நோட்டுகள் எங்கே?
8 நவம்பர் 2016 அன்று பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் நிறுத்தப்பட்டு, புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ரூ.1000 நோட்டுக்கு ரூ.2000 நோட்டு ஈடாகிவிடும் என்று அரசு நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கை வீண்போனது. சந்தையில் ரூ.2000 நோட்டை பெற மக்கள் தயக்கம் காட்டினர். 2017-18 ஆம் ஆண்டில், 33,630 லட்சம் 2000 நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.72 லட்சம் கோடி ஆகும்.
31 மார்ச் 2017 அன்று புழக்கத்தில் இருந்த மொத்த நோட்டுகளின் மதிப்பில் ரூ.2000 நோட்டுகளின் பங்கு 50.2 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், மார்ச் 31, 2022 அன்று, புழக்கத்தில் இருந்த மொத்த நோட்டுகளின் மதிப்பில் ரூ.2000 நோட்டுகளின் பங்கு 13.8 சதவீதமாகக் குறைந்தது என சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2000 ரூபாய் நோட்டின் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி இன்னும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இது அச்சடிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், நோட்டின் இயக்கம் நிறுத்தப்படுவது தொடர்பாக தெளிவான அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
இதற்கான முக்கிய காரணத்தை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
இது குறித்து ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெளிவான தகவலை தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டு, 2020-21 நிதியாண்டு மற்றும் 2021-22 நிதியாண்டு ஆகிய ஆண்டுகளில் ஒரு 2000 நோட்டு கூட அச்சிடப்படவில்லை. இதனால் சந்தையில் ரூ.2000 நோட்டு புழக்கம் குறைந்துள்ளது.
அரசு கூறுவது என்ன
தற்போது, இது குறித்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. எனினும், 2021ம் ஆண்டிலும், ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறித்த கேள்விகள் எழுந்தபோது, அப்போதைய நிதித்துறை இணை அமைச்சர், அனுராக் தாக்கூர், மக்களவையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை. அதனால்தான் 2000 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.’ என கூறினார். 2019 ஆம் ஆண்டில், பொருளாதார விவகாரங்கள் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தனது அறிக்கையில், மதிப்பிடப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப நோட்டுகளை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். 2000 ரூபாய் நோட்டுகள் பொருளாதார பயன்பாட்டு செயல்பாட்டின் மொத்த புழக்கத்தில் 35% பங்கு வகிக்கின்றன. இந்த அளவு போதுமானதை விட அதிகமாகும்.
2000 நோட்டுகள் உண்மையில் பிரச்சனையாக இருக்குமா?
அதிக மதிப்புள்ள நோட்டுகள் கருப்புப் பணத்தை அதிகரித்து ஊழலை ஊக்குவிக்கிப்பதாக பாஜக எம்பி சுஷில் மோடி கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து இந்திய சந்தைக்கு 2,000 ரூபாய் போலி நோட்டுகள் அதிக அளவில் கொண்டு வரப்படுவதாக என்ஐஏ (National Investigative Agency) பலமுறை கூறியுள்ளது. இந்த கள்ள நோட்டுகளை அடையாளம் காண்பதும் எளிதல்ல. புலனாய்வுப் பணியகம் (ஐபி) மற்றும் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியவையும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக அரசுக்கு அறிக்கை அளித்திருந்தன.
வருமான வரித்துறையின் அனைத்து சோதனைகளிலும், கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் பெரும்பாலானவை ரூ.2,000 நோட்டுகள் ஆகும். வரி ஏய்ப்பு மற்றும் பொருளாதாரக் குற்றங்களில் 2000 நோட்டுகளின் பங்கு அதிகம் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 1,000 ரூபாய் நோட்டுக்குப் பதிலாக, 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஊழல் மேலும் அதிகரிக்கலாம் என, எதிர்க்கட்சிகள் கூறியது இங்கு கவனிக்கத்தக்கது. தற்போது இதே பின்னணியில்தான் அரசும் 2000 ரூபாய் நோட்டு குறித்து ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்டுகின்றது.
மேலும் படிக்க | கள்ளநோட்டுகள் அதிகரிப்பு! 2021ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60% 2000 தாள்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ