வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு விரைவில் அமல்: மத்திய அமைச்சர் கட்கரி

சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள் நடப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2022, 07:36 PM IST
  • நாடு முழுவதும் உள்ள வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு அமல் படுத்தப்படலாம்.
  • சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது.
  • ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள்
வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு விரைவில் அமல்: மத்திய அமைச்சர் கட்கரி title=

நாடு முழுவதும் உள்ள வாகனங்களுக்கு புதிய வேக வரம்பு அமல் படுத்தப்படலாம். மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விக்கு பதிலளித்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார். பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

சர்வதேச விதிகளின் அடிப்படையிலும், மாநில அரசுகளிடம் மேற்கொள்ளும் ஆலோசனைக்கு பிறகு, இருவழிச் சாலை, நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைகளில் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள்

சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள் நடப்பதாகவும் கட்காரி வருத்தம் தெரிவித்தார். விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை,  தொற்றுநோய், போர், கலவரம் போன்றவற்றில் இறக்கும் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக உள்ளது என்றார்.

மேலும் படிக்க: ஜியோ அசத்தல்! 15 ஓடிடி தளங்களை இலவசமாக பார்க்கலாம்

இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பிற நடவடிக்கைகளுடன், பிரபலங்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சீன நிறுவனத்துடன் கைகோர்த்த ஜியோ -மாஸ் பிளான் பின்னணி

'புதிய உயர்மட்ட சாலைகளை அரசு அமைக்கிறது'

பல நகரங்களுக்கு இடையே உள்ள பயண தூரத்தை குறைக்கும் வகையில் புதிய உயர்மட்ட சாலைகளை அரசு உருவாக்கி வருவதாக கட்காரி கூறினார். இந்த வரிசையில், இந்த புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, டெல்லியில் இருந்து சண்டிகருக்கு உள்ள பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறையும் என்றும், ஜெய்ப்பூர், டேராடூன் மற்றும் ஹரித்வாரை டெல்லியில் இருந்து இரண்டு மணி நேரத்தில் அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: இதுக்கு மேல பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான் எதிர்பார்க்காதீங்க! மாஸ் காட்டும் ஜியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News