Atal Pension Scheme: வாழ்க்கைக்கு மிக தேவையான விஷயங்களில் பணமும் ஒன்று. பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. இள வயதில் ஈட்டும் பணத்தில் ஒரு பகுதியை முதுமைக்காக சேமித்து வைக்கும் பழக்கம் பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும். எதிர்காலத்திற்காக திட்டமிடும் நபர்கள், தங்கள் வருவாயில் இருந்து சில தொகையைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள், நல்ல வருமானத்தையும் பெற விரும்புகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிலர் தங்கள் முதுமையை மனதில் வைத்து, அதற்காக முதலீடு செய்து, முதலீட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மொத்தத் தொகை அல்லது ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் (Pension) பெற உதவும் திட்டத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் அடல் பென்ஷன் திட்டம் மிகவும் உபயோகமாக இருக்கும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த திட்டத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7 கோடியை எட்டியிருப்பதில் இருந்தே இதை அறிந்துகொள்ளலாம். 


Atal Pension Scheme


அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது. இள வயதிலேயே சேமிக்க தொடங்கினால், இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்து முதுமையை பொருளாதார ரீதியாக பலப்படுத்திக்கொள்ளலாம். 


APY திட்டத்தில் உத்தரவாதமான ஓய்வூதியம்


முதுமையை சுகமாக கழிக்கும் கனவை அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களின் முதலீட்டிற்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு எப்போது.. அப்டேட் இதோ


APY திட்டத்தில் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி?


- இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியமாகும். 
- ஒருவர் 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், அவருக்கு 60 வயதாகியவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். 
- இதன் கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
- ஒருவர் 18 வயதில் இதில் முதலீடு செய்யத் தொடங்குகிறார் என வைத்துக்கொள்வோம்.
- ஒவ்வொரு மாதமும் 210 ரூபாய் டெபாசிட் (ஒரு நாளைக்கு வெறும் ரூ.7) செய்வதன் மூலம் அவருக்கு 60 வயதுக்கு பிறகு  மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். 
- 1,000 ரூபாய் ஓய்வூதியம் போதுமானால், இந்த வயதில் ஒவ்வொரு மாதமும் 42 ரூபாய் டெபாசிட் செய்தால் போதும்.


அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்வதன் மூலம் கணவன், மனைவி இருவரும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். 60 வயதுக்கு முன் கணவர் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். கணவன்-மனைவி இருவரும் இறந்தால், நாமினிக்கு முழு தொகையும் கிடைக்கும். 


இந்தத் திட்டத்தில் 7 கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்


அடல் பென்ஷன் திட்டம் ஒரு பிரபலமான ஓய்வூதிய திட்டமாக உள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பிரபலத்தை, இதில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் ஏபிஒய் திட்டத்தில் (APY Scheme) சேர்ந்துள்ளனர். 2024-25 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 56 லட்சம் புதிய சந்தாதாரர்கள் அடல் பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ளனர்.


Tax Benefits: வரி விலக்கு


- APY திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உத்தரவாதமான ஓய்வூதியம் மட்டுமின்றி இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
- இதில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். 
- இந்த வரிச் சலுகை வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. 
- 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 
- கணக்கைத் திறக்க, அவர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சரியான வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். 
- மேலும், விண்ணப்பதாரரிடம் மொபைல் எண் இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: காப்பீட்டு நன்மைகள்... அமைச்சர் அளித்த அட்டகாசமான தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ