'ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராதது ஏன் தெரியுமா...?' - சீமான் சொல்லும் சீக்ரெட்டை பாருங்க

NTK Seeman Latest News Updates: ஸ்டாலின் உள்ளிட்டோரின் வீட்டிற்கு ரெய்டு வராமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 18, 2024, 04:09 PM IST
  • இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
  • வ.உ.சி சிலைக்கு மாலையிட்டார்.
  • தவெக - அதிமுக கூட்டணி தகவல் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
'ஸ்டாலின் வீட்டுக்கு ரெய்டு வராதது ஏன் தெரியுமா...?' - சீமான் சொல்லும் சீக்ரெட்டை பாருங்க title=

NTK Seeman Latest News Updates: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி (Trichy) நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (NTK Chief Coordinator Seeman) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "வ.உ.சி கப்பலொட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை.

'தமிழர்கள் மறக்கடிக்கப்படுகிறார்கள்'

திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டதுதான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள். வல்லபாய் பட்டேலை தூக்கி பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர, அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர்.

மேலும் படிக்க | தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தளபதி விஜய்? தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால், அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்கு செல்லும் போது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா?" என கேள்வி எழுப்பியிருந்தார். 

மேலும்,"தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. நாங்கள் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கை உடையவன் நான்" என்றார். தவெக - அதிமுக கூட்டணி குறித்து தகவல்கள் பரவிய நிலையில், இதனை முற்றிலும் மறுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார். 

திமுக - பாஜக 

மற்ற மாநிலங்களில் பாஜகவின் எதிர்க்கட்சியை சேர்ந்த முதல்வர்கள் உள்ளிட்ட எல்லோரின் வீட்டுக்கும் ரெய்டு வருகிறார்கள். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்காண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு வருகிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவில் இவர்கள் வீட்டுக்கு (ஸ்டாலின்) மட்டும் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை. அவர்களுக்கு வராது... அதற்கு காரணம் அவர்கள் (திமுக) கரைப்படியாது கரம் என்பதல்ல, கப்பம் சரியாக கட்டி கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

பாஜக ஆளும் மாநில முதல்வர்களையோ அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும் விளையாட்டு துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால் மாலையில் மகன் சந்திக்கிறார். திமுகவும் பாஜகவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள்" என்றார்.

மேலும் படிக்க | அதிமுக கூட்டத்திற்கு வந்தால் இலவச நாற்காலி! அள்ளிக்கொண்டு சென்ற பொதுமக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News