அடுக்குமாடி குடியிருப்பு வீடு விலை: நீங்கள் டெல்லி-என்சிஆரில் வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆம், நடப்பு காலண்டர் ஆண்டின் இரண்டாவது (ஏப்ரல்-ஜூன்) காலாண்டில், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) வீடுகளின் விலைகள் ஆண்டு அடிப்படையில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மும்பை பெருநகரப் பகுதியில் (எம்எம்ஆர்) விலை மூன்று சதவீதம் குறைந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றில் தெரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலுவான தேவை காரணமாக விலை உயர்வு
CREDAI, Colliers India மற்றும் Liaises Foras ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின்படி, வலுவான தேவை காரணமாக இரண்டாவது காலாண்டில் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீதம் அதிகரித்துள்ளன. அறிக்கையின்படி, கொல்கத்தாவில் வீடுகளின் விலைகள் ஆண்டு அடிப்படையில் 15 சதவீதம் அதிகரித்துள்ளன. இதைத் தொடர்ந்து டெல்லி-என்சிஆரில் 14 சதவீதமும், ஹைதராபாத்தில் 13 சதவீதமும் அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் எவ்வளவு? 3% அல்லது 4%? இதன் பின் உள்ள கணக்கீடு என்ன?


எட்டு நகரங்களில் மும்பையில் மட்டுமே விலை குறைவு
எட்டு நகரங்களில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதியில் (MMR) மட்டுமே மூன்று சதவீத விலை வீழ்ச்சியைக் கண்டதாக அறிக்கை கூறுகிறது. அங்கு விலை ஒரு சதுர அடிக்கு ரூ.19,111 ஆக குறைந்துள்ளது. லைசஸ் ஃபோராஸின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் கபூர் கூறுகையில், கடந்த ஆண்டு வீட்டுச் சந்தையில் ஏராளமான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த வேகம் நிலையானது. வரத்து அதிகரித்துள்ளதால் விலை உயர்வை மிதமாக வைத்துள்ளது.


நாடு முழுவதும் விற்பனையின் வேகம் வீடு வாங்குபவர்களின் நேர்மறையான உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்று CREDAI தேசிய தலைவர் போமன் இரானி கூறினார். கடந்த 10 காலாண்டுகளில் நாடு முழுவதும் வீடுகளின் விலையில் நிலையான ஏற்றம் காணப்படுவதாக கோலியர்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பியூஷ் ஜெயின் தெரிவித்தார். அறிக்கையின்படி, புனேயில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வீட்டு விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 11 சதவீதமும், அகமதாபாத்தில் 10 சதவீதமும், பெங்களூரில் 10 சதவீதமும், சென்னையில் 6 சதவீதமும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் வீடுகளின் விலை உயர்வு
இதனிடையே அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குவோருக்கு ஏற்கனவே இருந்த சுமை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பிரிபடா பங்கான (யுடிஎஸ்) நிலத்துக்கும், கட்டடத்துக்கும் தனித்தனி பத்திரப்பதிவு நடந்து வந்த நிலையில், அதனை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி பிரிபடா நிலத்துக்கான பதிவுக் கட்டணம் 9 சதவிகிதமாகவும், கட்டடத்துக்கு 4 சதவிகித கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.அதாவது, கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஒருவா் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில், குடியிருப்பின் விற்பனைப் பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை இனி தனியாக பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்; இதே போன்று கட்டுமான ஒப்பந்தக் கட்டணமாக தனியே 4 சதவீத கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் 3% அல்லது 4%? ஏன் இந்த குழப்பம்? எப்போது அறிவிப்பு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ