GPF Interest Rates: ஜிபிஎஃப் தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதம் மாறாமல்  7.1 சதவீதமாகவே இருக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது ஜிபிஎஃப் சந்தாதாரர்களுக்கு சிறிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"2024-2025 ஆம் ஆண்டில், பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த நிதிகளுக்கான சந்தாதாரர்களின் கிரெடிட்டில் உள்ள தொகைக்கு அக்டோபர் 1, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரையிலான காலத்திற்கு, 7.1% என்ற விகிதத்தில் வட்டி செலுத்தப்படும் என்று பொதுவான தகவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் அக்டோபர் 1, 2024 முதல் அமலில் இருக்கும்" என்று பொருளாதார விவகாரங்கள் துறையின் அலுவலக குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


General Provident Fund


GPF மீதான வட்டி விகிதங்கள் அரசாங்கம் வெளியிடும் அறிவிப்புகளுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன. மேற்கூறிய காலத்திற்கான 7.1 சதவீத வட்டி விகிதம் பின்வரும் நிதிகளுக்குப் பொருந்தும்:


1. The General Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்);


2. The Contributory Provident Fund: பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா)


3. The All-India Services Provident Fund: அகில இந்திய சேவைகள் வருங்கால வைப்பு நிதி


4. The State Railway Provident Fund: மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி.


மேலும் படிக்க | EPS ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்: உயர்கிறதா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்?


5. The General Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்)


6.  The Indian Ordnance Department Provident Fund: இந்திய ஆர்ட்னன்ஸ் துறை வருங்கால வைப்பு நிதி


7.  The Indian Ordnance Factories Workmen's Provident Fund: இந்திய ஆயுதத் தொழிற்சாலைகள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி


8.  The Indian Naval Dockyard Workmen's Provident Fund: இந்திய கடற்படை கப்பல்துறை பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி


9.  The Defense services Officers Provident Fund: பாதுகாப்பு சேவை அதிகாரிகளுக்கான வருங்கால வைப்பு நிதி


10. The Armed Forces Personnel Provident Fund: ஆயுதப்படை பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி


இதற்கிடையில், பிபிஎஃப் (PPF) மற்றும் என்எஸ்சி (NSC) உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான (Small Saving Schemes) அக்டோபர் 1, 2024 முதலான வட்டி விகிதங்களை, தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக அரசு மாற்றாமல், முன்னர் இருந்த விகிதத்திலேயே நீட்டித்துள்ளது. 


“அக்டோபர் 1, 2024 முதல் தொடங்கி, டிசம்பர் 31, 2024 அன்று முடிவடையும் 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், 2024-25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரை) அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களிலிருந்து மாறாமல் அப்படியே இருக்கும்” என்று நிதி அமைச்சக (Finance Ministry) அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


- அறிவிப்பின்படி, சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் (Sukanya Samriddhi Yojana) கீழ் டெபாசிட்களுக்கு 8.2 சதவீத வட்டியும், மூன்று வருட கால டெபாசிட்டுகளுக்கு 7.1 சதவீத வட்டியும் கிடைக்கும். 


- அதிகம் பிரபலமான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் தபால் அலுவலக சேமிப்பு வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம் மற்றும் 4 சதவீதமாக இருக்கும். 


- கிசான் விகாஸ் பத்திரத்தின் (KVP) வட்டி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும், முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும்.


- தேசிய சேமிப்புச் சான்றிதழின் (NSC) வட்டி விகிதம் ஜூலை-செப்டம்பர் 2024 காலகட்டத்தில் 7.7 சதவீதமாக இருக்கும்.


மேலும் படிக்க | ரயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அட்டகாசமான தீபாவளி போனஸ்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ