RBI வழிகாட்டுதல்கள்: வங்கிகளில் கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கடனை திருப்பி செலுத்திவிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இவர்களுக்காக ஒரு புதிய வழிகாட்டுதலை அறிவித்துள்ளது. இது வங்கியில் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வங்கிகள், என்பிஎஃப்சி (NBFC) -கள், ஹோம் பைனான்ஸ் அமைப்புகள், ஏஆர்சி (ARC) மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிதி சேவை அமைப்புகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கியில் கடன் பெற்று, முழு வங்கிக் கடனையும் திருப்பிச் செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களின் ஆவணங்களைத் திருப்பித் தர, வாடிக்கையாளர் கடன் வாங்கிய வங்கி அல்லது NBFC நிறுவனம் தயங்கினாலோ, தாமதித்தாலோ, வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, இப்போது கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஆவணங்களுக்கு ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். 


ரிசர்வ் வங்கி அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இதை அறிவித்துள்ளது. இந்த ஆவணங்களில் அனைத்து வகையான அசையும் மற்றும் அசையா சொத்துகளின் அனைத்து அசல் ஆவணங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதி டிசம்பர் 1, 2023 முதல் அமல்படுத்தப்படும்.


30 நாட்களுக்குள் ஆவணங்களை பெற்றுக்கொள்ள விதி உள்ளது


கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, அதாவது செட்டில் செய்த பிறகு, சம்பந்தப்பட்ட நபரின் ஆவணங்களை 30 நாட்களுக்குள் வங்கி அல்லது கடன் வழக்கிய நிறுவனம் திருப்பித் தர வேண்டும். நாட்டின் மத்திய வங்கியான ஆர்பிஐ, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் மன சஞ்சலங்களைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. டிசம்பர் 1, 2023 முதல் விதிகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பலம் தரும். 


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு என்ஜாய்மெண்ட்.. ரயில்வே தந்த ஜாக்பாட் நியூஸ்


மேலும், NBFC நிறுவனம் அல்லது எந்த வங்கியாலும் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான மனரீதியான துன்புறுத்தல்களையும் எதிர்கொள்வது தவிர்க்கப்படும். தற்போது வரை, கடன் முழுவதுமாக திருப்பி செலுத்திய பிறகு, வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆவணங்களை அவர்களிடம் சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்காமல் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவர்களை அலைய வைக்கின்றன. 


இப்போது வந்துள்ள விதி என்ன? 


“2003 முதல் பல்வேறு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு (Regulated Entities / REs) வழங்கப்பட்ட நியாயமான நடைமுறைக் குறியீட்டின் (Fair Practices Code) வழிகாட்டுதல்களின்படி, RE-க்கள் முழுமையாக கடன் திருப்பிச் செலுத்தப்பட்டு (Full repayment)கடன் கணக்கை முடித்தவுடன் அசையும் மற்றும் அசையா என அனைத்து சொத்து ஆவணங்களையும் திருப்பிக் கொடுப்பது அவசியமாகும். இதுபோன்ற அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களை வெளியிடுவதில் RE கள் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கிறார்கள். இதனால் பல வித சர்ச்சைகளும் கிளம்புகின்றன” என இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


கூடுதல் தகவல்:


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் இஎம்ஐ அடிப்படையிலான தனிநபர் கடன்களுக்கான மிதக்கும் வட்டி விகிதத்தை (Floating Interest Rates) மீட்டமைக்க புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் NBFCகள் உட்பட அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களும் (REs) கடன்களை அனுமதிக்கும் போது, ​​பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் கடன் பெறுபவர்களின் இஎம்ஐ (EMI), கடன் காலம் அல்லது இரண்டையும் பாதிக்கலாம் என்பதை அவர்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வங்கி கூறியது. வட்டி விகிதங்கள் காரணமாக இஎம்ஐ, கடன் காலம் அல்லது இரண்டிலும் மாற்றம் ஏற்பட்டால், கடன் வாங்கியவர்களுக்கு முறையான வழிகள் மூலம் உடனடியாகத் தெரிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | புதிய பாஸ்போர்ட் எடுக்கும் விதிகளில் மாற்றம்: இனி எளிதாக பெற்றுக்கொள்ளலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ