EPF உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு: அதிகரிக்கும் ஓய்வூதியம்.... ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்
EPFO Wage Ceiling Hike: புத்தாண்டு 2025 -இன் தொடக்கம் தனியார் துறை ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை அளிப்பதுடன் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. புத்தாண்டில் அவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கின்றது. ஆம்!! புத்தாண்டு 2025 -இன் தொடக்கம் தனியார் துறை ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை அளிப்பதுடன் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பள உயர்வு மற்றும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிது அமைப்பின் (EPFO) கீழ் செயல்படும் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தின் (EPS) ஓய்வூதிய கணக்கீட்டில் மாற்றம் ஆகியவை, அரசாங்கம் இந்த முறை தனியார் துறை ஊழியர்களின் பிரச்சனைகள் பக்கம் கவனம் செலுத்தி அதற்கு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
பணவீக்கம் மற்றும் குறைந்த வசதிகள் காரணமாக இபிஎஃப் உறுப்பினர்களாக (EPF Members) இருக்கும் தனியார் துறை ஊழியர்கள் நீண்டகாலமாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இப்போது இந்த திசையில் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Budget 2025: பட்ஜெட் 2025 இல் EPFO சீர்திருத்தத்திற்கான சாத்தியம்
2025 பட்ஜெட்டில் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட்டில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) ஒரு மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகலாம். ஊழியர்களின் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான தற்போதைய வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவதற்கான திட்டம் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது,
Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டால் கிடைக்கும் நன்மை என்ன?
தற்போதைய ஊதிய உச்ச வரம்பான ரூ.15,000, 2014 முதல் நடைமுறையில் உள்ளது. எனினும், மாறிவரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அதைத் திருத்த வேண்டிய அவசியம் அதிகமாக உள்ளதாக ஊழியர்கள் நீண்ட நாட்களாக கூறி வருகிறார்கள். இந்த உச்சவம்பு அதிகரிக்கப்பட்டால், தனியார் துறை ஊழியர்களுக்கு சிறந்த ஓய்வூதியம் கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களின் நிதி நிலையும் மேம்படும்.
Private Sector Employees: இந்த மாற்றத்தால் ஊழியர்களுக்கு என்ன தாக்கம் இருக்கும்?
- இபிஎஃப்ஓ ஓய்வூதியக் கணக்கீட்டு வரம்பை அதிகரிப்பது ஊழியர்களின் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்தும்.
- உதாரணமாக, ஓய்வூதிய வரம்பு ரூ.15,000 =இல் இருந்து ரூ.21,000 ஆக உயர்ந்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.2,550 கூடுதல் ஓய்வூதியம் (Pension) பெற வாய்ப்பு உள்ளது.
- எனினும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து இபிஎஃப் கணக்கிற்கு (EPF Account) அதிக பங்களிப்பு அளிக்கப்படும்.
- இதன் காரணமாக ஊழியர்களின் கையில் கிடைக்கும் மாத சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரியின் அளவு சற்று குறையும்.
எனினும், கையில் கிடைக்கும் சம்பளத்தின் அளவு குறைவது குறுகிய கால தாக்கமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் நீண்ட கால பலன்கள் ஊழியர்களின் பணி ஓய்வு காலத்தில் தெரியும். எதிர்காலத்தில் நிதிப் பாதுகாப்பிற்காக போராடும் ஊழியர்களுக்கு இந்த மாற்றம் குறிப்பாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வரம்பை அதிகரிப்பதால் என்ன பயன்?
- EPF இன் கீழ் சம்பள வரம்பை நேரடியாக அதிகரிப்பதால் பணியாளர்களின் இபிஎஃப் கணக்கு (EPF Account) மற்றும் ஓய்வூதியக் கணக்கிற்கு அதிக பணம் வரும் என்று அர்த்தம்.
- இதன் மூலம் இபிஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) பங்களிப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல், முதலாளியும் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.
- PF இன் கீழ் சம்பள வரம்பை அதிகரிப்பதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.
- ஏனெனில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை உள்ளது.
- இந்த வரம்பை அதிகரிப்பதன் நிதி தாக்கம் அரசு மற்றும் தனியார் துறையில் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ