அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் ஜாக்பாட்: அகவிலைப்படி உயர்வு எவ்வளவு தெரியுமா? முழு கணக்கீடு இதோ

Published: Dec 24, 2024, 11:11 AM IST|Updated: Dec 24, 2024, 11:23 AM IST

7th pay commission:அகவிலைப்படி அதிகரிப்பு கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும், இது அவர்களின் வாங்கும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

7th Pay Commission1/11

ஜனவரி 2025 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நல்ல செய்தியைக் கொண்டு வரவுள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AICPI (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 2025 இல் டிஏ 3% அதிகரித்து, மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 56% ஆக அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

Central Government Employees2/11

இந்த அகவிலைப்படி அதிகரிப்பு கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும், இது அவர்களின் வாங்கும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலையின் அடிப்படையில் டிஏ உயர்வை மத்திய அரசு முடிவு செய்கிறது.

 

AICPI Index3/11

ஏஐசிபிஐ இன்டெக்ஸ் என்பது பணவீக்கம் மற்றும் நுகர்வோர் உபயோக பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுவதற்கான முக்கிய கருவியாக உள்ளது. ஜூலை 2024 முதல் அக்டோபர் 2024 வரையிலான தரவு, அகவிலைப்படி அதிகரிக்கும் திசையில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. பொதுவாக முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன.

Central Government Employees4/11

AICPI குறியீட்டின் முக்கிய புள்ளிவிவரங்கள்: ஜூலை 2024: குறியீட்டு மதிப்பெண் 142.7 ஆக இருந்தது, டிஏ விகிதம் 53.64% ஆக இருந்தது. ஆகஸ்ட் 2024: குறியீட்டு எண் 142.6 ஆகக் குறைந்தது, ஆனால் டிஏ விகிதம் 53.95% ஐ எட்டியது. செப்டம்பர் 2024: குறியீட்டு எண் 143.3ஐ எட்டியது, டிஏ 54.49% ஆக இருந்தது.அக்டோபர் 2024: குறியீடு 144.5 ஆகவும், டிஏ விகிதம் 55.05% ஆகவும் உயர்ந்தது. 

DA Hike5/11

நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 இன் போக்கு எப்படி இருக்கும்? ஜூலை முதல் அக்டோபர் வரையிலான அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, நவம்பர் மாதத்தில் AICPI குறியீட்டு எண் 145 ஆகவும், டிசம்பரில் 145.3 ஆகவும் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 2024: டிஏ விகிதம் 55.59% ஆக இருக்கலாம். டிசம்பர் 2024: டிஏ விகிதம் 56.18% ஆக அதிகரிக்கலாம். இந்த மதிப்பீடுகளிலிருந்து ஜனவரி 2025 இல் அகவிலைப்படி 3% அதிகரிக்கலாம் என்பது தெளிவாகிறது.

Pensioners6/11

மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியை அதிகரிக்கின்றது. ஜனவரி மற்றும் ஜூன் மாதங்கள் முதல் இந்த டிஏ உயர்வு அமலுக்கு வருகின்றது. கடைசியாக ஜூலை 2024 இல் அகவிலைப்படி 3% அதிகரித்தது. இப்போது 2025 ஜனவரியில் மீண்டும் இது 3% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுவாக மார்ச் 2025 மாதம் வெளியிடப்படும். இந்த உயர்வால் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

Salary Hike7/11

7வது ஊதியக் குழுவின் படி, டிஏ அதிகரிப்பின் தாக்கல் ஊழியர்களின் சம்பளத்தில் நேரடியாக இருக்கும். குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் (ரூ18,000) உள்ள ஊழியர்கள் இந்தப் பலனை மிகத் தெளிவாகக் காண்பார்கள்.

Salary Hike Calculation8/11

ஊதிய உயர்வு கணக்கீடு: ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். ஜனவரியில் டிஏ 56% ஆக அதிகரித்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.

Pension Hike9/11

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு (Central Government Pensioners) தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.

Dearness Allowance10/11

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் அளிக்கப்படுகின்றது. அகவிலைப்படி சம்பள கட்டமைப்பில் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.