முக்கிய விதி: வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்தாலும் வரி செலுத்த வேண்டும் தெரியுமா?
Bank Transaction Rules:தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வித்ட்ரா செய்வதை கவனமாக திட்டமிட வேண்டும். இதற்கு, வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகையை கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Bank Transaction Rules: இந்த காலத்தில் பெரும்பாலும் அனைவரிடமும் வங்கிக் கணக்கு இருக்கின்றது. ஆனால் வங்கிகளில் கணக்கு இருக்கும் அனைவருக்கும் அதற்கான முழு விதிகளை பற்றிய புரிதல் இல்லை. நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றே நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆம், எடுக்கலாம். ஆனால், திட்டமிட்டு பணத்தை எடுத்தால், தேவையில்லாமல் அதிக வரி செலுத்துவதை தவிர்க்கலாம் என்பது பலருக்கு தெரியாது. இந்த முக்கிய விஷயத்தை பற்றி இங்கே காணலாம்.
வங்கிக் கணக்கு: திட்டமிடல் அவசியம்
தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வித்ட்ரா செய்வதை கவனமாக திட்டமிட வேண்டும். இதற்கு, வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகையை கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுப்பதற்கு கட்டணம் செலுத்தும் விதி ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் அல்ல, வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிக் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியும்?
- வங்கி வாடிக்கையாளர்கள் (Bank Customers) தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் இலவசமாக எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
- ஆனால், இதற்கான சில விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன.
- வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) 194N பிரிவின் கீழ், ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால், அவர் டிடிஎஸ் (TDS) செலுத்த வேண்டும்.
- இருப்பினும், தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யாதவர்களுக்கு மட்டுமே இந்த விதி.
- தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யாதவர்கள் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் இருந்து ரூ.20 லட்சத்திற்கு மேல் எடுத்தால் TDS செலுத்த வேண்டும்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிவாரணம்
வருமான வரி கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்பவர்களுக்கு இந்த விதியின் கீழ் அதிக நிவாரணம் கிடைக்கும். ஐடிஆர் தாக்கல் செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி, தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில் இருந்து TDS செலுத்தாமல் ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடி வரை ரொக்கமாக எடுக்கலாம்.
மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் காலணி வரை விலையில் ஏற்றம்: ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
எவ்வளவு TDS செலுத்த வேண்டும்?
- இந்த விதியின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால், 2 சதவீத TDS கழிக்கப்படும்.
- மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்யாத நபர்களுக்கு, ரூ.20 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 2 சதவீத TDS கழிக்கப்படும்.
- இவர்கள் ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால் 5 சதவீத TDS செலுத்த வேண்டும்.
ஏடிஎம் பரிவர்த்தனைகளில் உள்ள கட்டண அளவு என்ன?
ATM -இல் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் எடுப்பதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. ஜனவரி 1, 2022 முதல் ATM -இல் இருந்து பணம் எடுப்பதற்கான சேவைக் கட்டணத்தை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) உயர்த்தியது. இப்போது நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் ரூ.21 வசூலிக்கின்றன. இதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் 20 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.
பெரும்பாலான வங்கிகள் தங்கள் ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்குகின்றன. இது தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மூன்று பரிவர்த்தனைகள் இலவசமாக கிடைக்கும். எனினும், மெட்ரோ நகரங்களில், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கியிலிருந்தும் மூன்று முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும்.
வங்கிக் கணக்கு (Bank Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கு குறித்த விதிகள், நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய முழுமையான தகவல்களை வைத்திருப்பது நல்லது. இதன் மூலம் பல செயல்முறை சிக்கல்களையும் நிதி இழப்புகளையும் தவிர்க்க முடியும்.
மேலும் படிக்க | F&O வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.60,000 கோடி நஷ்டம்: செபி தலைவர் பகீர் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ