ITR Filing: இன்றே கடைசி நாள்.... நாளை முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய யாருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

ITR Filing: அபராதங்கள், வருமான வரித்துறையின் நோட்டீஸ் (Income Tax Notice), அல்லது பிற தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க விரும்புனால், இன்று நள்ளிரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் (ITR) செய்து விடுவது நல்லது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 31, 2024, 11:02 AM IST
  • அபராதம் / சட்டரீதியான சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம்.
  • யாருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?
  • வரி செலுத்துவோரின் வருமானத்தைப் பொறுத்து அபராதம் மாறுபடும்.
ITR Filing: இன்றே கடைசி நாள்.... நாளை முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய யாருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? title=

ITR Filing: 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடை நாள் இன்று. இன்றோடு இதற்கான காலக்கெடு முடிவடைகிறது. இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து இன்று அதை செய்து விடுவது நல்லது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், பல இன்னல்களை சந்திக்க நேரிடலாம். நீங்கள் இதற்காக அபராதமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும். 

அபராதங்கள், வருமான வரித்துறையின் நோட்டீஸ் (Income Tax Notice), அல்லது பிற தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க விரும்புனால், இன்று நள்ளிரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் (ITR) செய்து விடுவது நல்லது. 2023-24 ஆம் ஆண்டிற்கான ரிட்டர்ன்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை, அதாவது இன்று. 

ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

CBDT வருமான வரி கணக்கை (Income Tax Return) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து இந்திய வரி பயிற்சியாளர்களின் கூட்டமைப்பு (AIFTP) கோரியுள்ளது. ஆனால் இதை பற்றி வருமான வரித்துறை எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. கடைசி தேதி நீட்டிக்கப்படாவிட்டால் ஆகஸ்ட் 31 க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்த வேண்டி வரலாம். அபராத (Penalty) விவரங்களை இங்கே காணலாம். 

அபராதம் / சட்டரீதியான சிக்கல்களையும் சந்திக்க நேரிடலாம்

- கடைசி தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

-சட்டரீதியான விளைவுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டி வரலாம்.

- ஐடிஆர் -ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்தால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பல சிக்கலையும் தவிர்க்கலாம். 

- வருமான வரி விலக்கு வரம்பை விட குறைவான வருமானம் உள்ளவர்கள், பிடிக்கப்பட்ட வரி பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக மட்டுமே ஐடிஆர் தாக்கல் செய்கிறார்கள். 

- அப்படிப்பட்டவர்கள் தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு எந்தவிதமான அபராதமும் செலுத்த வேண்டியதில்லை.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு

யாருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்? 

- ஒரு நிதியாண்டில் 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் இருப்பவர்கள், தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டி வரலாம். 
- 2023-24 நிதியாண்டில் ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெற்றவர்கள் தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்தால், ரூ.5,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 
- அபராதங்களை தவிர்க்க, வருமான வரித் துறை, சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்ய மக்களுக்கு அவ்வப்போது நினைவூட்டுகிறது.

வரி செலுத்துவோரின் வருமானத்தைப் பொறுத்து அபராதம் மாறுபடும்

ஐடிஆர் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் வருமான வரித்துறையால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த அபராதம் அனைவருக்கும் ஒரே போல் இருப்பதில்லை. வரி செலுத்துவோரின் (Taxpayers) வருமானத்திற்கு ஏற்ப இது மாறுபடும். வருமான வரி வரம்பின் கீழ் வரும் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் (Income Tax Return Filing) செய்வது மிக அவசியமாகும். கடந்த நிதியாண்டில் நீங்கள் சம்பாதித்த மொத்த வருமானம் எவ்வளவு என்பதை இது காட்டுகிறது. இது தவிர, ஐடிஆர் -ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வது வரி செலுத்துவோருக்கு இன்னும் பல வழிகளில் நல்லது.

மேலும் படிக்க | ITR Filing: ஜூலை 31 கடைசி நாள்... இந்த காலக்கெடுவை தவறவிட்டால் என்ன நடக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News