புதிய வரி முறை: 2023-24 நிதியாண்டில், புதிய வரி முறைக்கான விருப்பத்தை அதிக மக்கள் விரும்பி ஏற்று வருகின்றனர். 2023-24 நிதியாண்டில் புதிய வரி முறையின் கீழ், ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படும். நடப்பு நிதியாண்டில் இதுவரை சுமார் 5.5 கோடி வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஒரு செய்தித்தாள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற வரி செலுத்துவோரில் பெரும்பாலானோரது ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் வரை உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிக்கையில் ஒரு மூத்த அரசு அதிகாரி, ‘5.5 கோடி வரி செலுத்துவோர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சரியமளிக்கும் விஷயம் அல்ல. ஆண்டு வருமானம் 7.5 முதல் 8 லட்சம் அல்லது 10 லட்சம் உள்ளவர்களும் வருமான வரியில் நேரான பாதையை விரும்புகிறார்கள்.' என கூறியுள்ளார். 


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 நிதிநிலை அறிக்கையில், வரி செலுத்துவோருக்கு வருமான வரி சலுகைக்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன் படி பழைய வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், புதிய வரி முறையின் கீழ் விலக்கு வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. அதாவது ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.


இது தவிர, நிதிச் சட்டம் 2023 இன் படி, அரசாங்கம் ரூ. 27,000 கூடுதல் நிவாரணம் வழங்கியுள்ளது, அதாவது மொத்தமாக, ரூ. 7.27 லட்சம் வரையிலான வருமானத்தில் வரி விலக்கு அளிக்கப்படும்.


மேலும் படிக்க | GST பில்லு கட்ட ரெடியா? ஒரு கோடி ரூபாய் வரைக்கும் ரொக்கப் பரிசு காத்திருக்கு


வரி செலுத்துவோருக்கு புதிய வரி முறையை (New Tax Regime) பயன்படுத்திய பிறகு பழைய வரி முறை அதை விட தங்களுக்கு ஏற்றதாக தோன்றினால், அவர்கள் மீண்டும் பழைய வரி முறையைத் தேர்வு செய்யலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார். நடப்பு நிதியாண்டில் எத்தனை பேர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது அடுத்த மதிப்பீட்டு ஆண்டில் (2024-25) தெரிந்துவிடும்.


வருமான வரித் துறையின் 2023 (Income Tax Depertment) தரவுகளின்படி, 4.84 கோடி வரி செலுத்துவோர் 5 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளனர், அதே சமயம் 1.12 கோடி வரி செலுத்துவோர் 5 முதல் 10 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் பெற்றுள்ளனர். அறிக்கையின்படி, 10 முதல் 20 லட்சம் வரை வருமானம் உள்ள வரி செலுத்துவோர் எண்ணிக்கை 47 லட்சமாக உள்ளது. 20 முதல் 50 லட்சம் வரை வருமானம் உள்ள வரி செலுத்துவோர் எண்ணிக்கை 20 லட்சமாகவும், 3.8 லட்சம் வரி செலுத்துவோர் 50 லட்சம் முதல் 1 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இது தவிர, 2.6 லட்சம் வரி செலுத்துவோர் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்றுள்ளனர்.


கூடுதல் தகவல்


வருமான வரி ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் யார்?


குறிப்பிட்ட நிதியாண்டில் (FY) ஒருவர் தனது மதிப்பிடப்பட்ட அளவை விட அதிக வரியைச் செலுத்தும் போது, வரி செலுத்திய நபருக்கு திருப்பி அளிக்கப்படும் அந்த கூடுதல் தொகை வருமன வரி ரீஃபண்ட் எனப்படும். நீங்கள் கட்டாய அட்வான்ஸ் வரியைச் செலுத்தும்போது அல்லது உங்கள் வருமானத்தில் TDS விலக்குகளைப் பெற்றிருந்தால் வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கும். 


வருமான வரி ரீஃபண்டில் தாமதம்


வருமான வரி ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறதா? முதலில் உங்கள் ஐடிஆர் -ஐ ஈ-வெரிஃபை செய்து விட்டீர்களா என்பதை சரிபார்க்கவும். உங்கள் ஐடிஆர் -ஐ ஈ-வெரிஃபை செய்யவில்லை என்றால், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை முழுமையடையாததாகக் கருதப்படும். அப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஐடிஆர் செல்லாது. ஆகையால், முதலில் நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைச் சரிபார்ப்பது நல்லது. 


மேலும் படிக்க | இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ