ரயில் டிக்கெட் புக் செய்யும் போது இதை செய்தால்.. 10 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும்
Railway Travel Insurance: ரயிலில் பயணம் செய்வதற்கு முன், இந்த விதிகளை (ரயில்வே பயணக் காப்பீடு) தெரிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் சிக்கலை சந்திக்க நேரிடலாம்.
ரயில்வே பயணக் காப்பீடு: பயணக் காப்பீடு (Travel Insurance) என்பது பயணத்தின் போது ஏற்படும் பேரழிவு, திருட்டு மற்றும் பிற சம்பவங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும். பெரும்பாலும் மக்கள் பயணக் காப்பீடு பற்றிய தகவலைப் பெற மாட்டார்கள் அல்லது தங்கள் பயணத்தை முன்பதிவு செய்யும் போது இந்த விருப்பத்தை புறக்கணித்துவிடுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் பயணிகளுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான்.
இந்த நிலையில் தற்போது பல வருடங்களால் இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் IRCTC பயணிகளுக்கு பயணக் காப்பீட்டு வசதியை வழங்குகிறது. இந்த காப்பீட்டு வசதி ரூ.10 லட்சம் வரை வழங்கப் படுகிறது மற்றும் இதற்கான பிரீமியம் தொகை வெறும் ரூ.1க்கும் குறைவானது. இது பயணிகளுக்கு ரயில்வே வழங்கும் மிகவும் மலிவான மற்றும் பாதுகாப்பான விருப்பமாகும். அந்த வகையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பயணக் காப்பீட்டு வசதியை IRCTC வழங்குகிறது. அதேபோல் இந்த காப்பீடு பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் அல்லது சேதங்களுக்கு ஈடுசெய்யும் விருப்பமாகும். மேலும் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நேரத்திலேயே இந்தக் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்தி பயணக் காப்பீட்டின் விருப்பத்தைத் தேர்வுசெய்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் பயண தேதி, இடம், பயணத்தின் காலம் மற்றும் பயணக் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை உள்ளிட வேண்டும். மேலும் நீங்கள் IRCTC மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பயணக் காப்பீட்டைத் தேர்வுசெய்தால், நாமினி விவரங்களை உள்ளிடுவதற்கான இணைப்பு உங்களுக்கு அனுப்பப்படும். அந்த நாமினி விவரங்களில், பெயர், மொபைல் எண், வயது போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும். இதனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பயணி அல்லது நாமினி இந்த காப்பீட்டு பாலிசியை க்ளெய்ம் செய்துக்கொள்ளலாம்.
ரயில்வேயின் படி இவ்வளவு தொகை பெறப்படுகிறது
* ரயில் விபத்தில் ஒருவர் இறந்தால், அவரது உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
* விபத்தில் பயணம் செய்பவர் முற்றிலும் ஊனமுற்றால், அவருக்கு ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும்.
* விபத்தில் ஒரு பயணிக்கு பகுதி ஊனமுற்றால், அவருக்கு 7.5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* ஒரு பயணி விபத்தில் காயம் அடைந்தால், அவருக்கு ரூ.2 லட்சம் க்ளெய்ம் கிடைக்கும்.
* ஒரு பயணி விபத்தில் இறந்தால், அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவரது குடும்பத்தினருக்கு போக்குவரத்து நிதியுதவியாக 10,000 ரூபாய் வழங்கப்படும்.
காப்பீடை இப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்
* பயணக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தின் அருகிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கோரிக்கை செயல்முறை பற்றிய தகவலைப் பெறவும்.
* சம்பவ விவரம், பயணிகளின் பெயர், டிக்கெட் விவரங்கள் மற்றும் தேவைப்படும் பிற தகவல்கள் போன்ற க்ளெய்ம் தொடர்பான தகவலை நிறுவனத்திற்கு வழங்கவும்.
* நாமினி அல்லது பயணிகள் தங்களின் ஆதார் அட்டை, பான் கார்டு, மருத்துவமனை பில் அல்லது இறப்புச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
* விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள் க்ளெய்ம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, ஒரு க்ளெய்மை விரைவாக தாக்கல் செய்வது மிகவும் முக்கியம்.
* நிறுவனம் விரைவில் ஆவண சரிபார்ப்பு செயல்முறையை முடித்து உங்கள் கணக்கிற்கு பணத்தை மாற்றிவிடும்.
மேலும் படிக்க | IRCTC Tour Package: வெறும் 8000 ரூபாயில் 5 நாட்கள் ஊட்டியை சுற்றி பார்க்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ