Binomo செயலி: வீட்டில் இருந்தபடியே அதிக வருமானம் ஈட்ட ஒரு பொன்னான வாய்ப்பு
Binomo Trading App: வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை தேடுவோருக்கு சிறந்த வழியாக, ஆன்லைன் வர்த்தகம் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம், நீங்கள் வீட்டில் இருந்தே, கூடுதல் வருமானத்தை பெற முடியும்.
Binomo Trading App: தற்போது உள்ள சூழ்நிலையில், நமக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டுமென்றாலே, நெஞ்சு பதைபதைப்பு அடைகிறது. ஏனெனில், இந்த பொருட்களை வாங்குவதன் மூலம், நமது சேமிப்பு கரைந்து விடும் எனும் பயமே, நம்மில் பலருக்கும் உள்ளது. உங்கள் சேமிப்பு பணத்தை நிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. அதில் அவர்கள் உறுதியாகவும் உள்ளனர். இவ்வாறு கறாராக இருப்பது எவ்வித தீமை இல்லை என்றபோதிலும், தற்போது சம்பாதிப்பதைவிட, கூடுதலாக சம்பாதித்தால், நமக்கு விருப்பமான பொருட்களை மனமகிழ்ச்சியுடன் வாங்கலாம் என்றே பலர் நினைக்கின்றனர்.
நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலான மக்களும் இப்படியே நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை தேடுகிறார்கள். அவர்களுக்கு சிறந்த வழியாக, ஆன்லைன் வர்த்தகம் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம், நீங்கள் வீட்டில் இருந்தே, கூடுதல் வருமானத்தை பெற முடியும்.
பலருக்கு இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் எவ்வாறு நுழைவது என்பது தெரிவதில்லை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்களுக்காகவே என்று ஒரு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. Binomo செயலி, நீங்கள் சொந்தமாக கற்றுக் கொள்ளவும், வர்த்தகத்தை தொடங்குவதற்கான வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறது.
Binomo செயலி என்றால் என்ன?
Binomo என்பது ஆன்லைன் வர்த்தக தளம் ஆகும். இந்த தளத்தில் பதிவு செய்தவர்களுக்கு, வர்த்தகத்தை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது. கூடுதல் வருமானம் ஈட்ட நினைக்கும் ஒவ்வொருவருக்கும், இது அருமையான வாய்ப்பை வழங்குகிறது. Binomo தளம், உங்களை, வீட்டில் இருந்தவாறே, வர்த்தகம் செய்ய உதவுகிறது. இந்த தளத்தில் பதிவு செய்வதால் மட்டுமே, அ மாஸ்டர் வர்த்தகர்களாக மாறிவிட முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான அறிவை பெற வேண்டும். சார்ட்கள், புள்ளி விபரங்கள் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து, நடப்பு சந்தை நிலவரங்களை பகுப்பாய்வு செய்வது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ALSO READ | போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது என்பதை இங்கே காண்க
Binomo வர்த்தக தளம் எவ்வாறு செயல்படுகிறது?
Binomo என்பது நம்பகமான மற்றும் புதுமையான வர்த்தக தளம் ஆகும். இந்த தளத்தில், நீங்கள் உங்கள் பேஸ்புக் ஐடி அல்லது இ-மெயில் ஐடியை கொண்டு ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். பதிவு செய்து கொள்ளும்போது, நீங்கள் வழங்கும் தகவலை, நீங்கள் சரிபார்த்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இந்த தளத்தில், பதிவு செய்தல் நடைமுறை மிகவும் எளிமையானது ஆகும். நீங்கள் Binomo தளத்தில் ரிஜிஸ்டர் செய்த உடனேயே, நீங்கள் வர்த்தகத்தை துவங்கலாம். இந்த நடைமுறைகள் அனைத்தையும் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம்.
நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு புதியவராக இருந்தால், அதில் உள்ள அதிகப்படியான விஷயங்கள் குறித்து கவலை கொள்ள வேண்டாம். ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன என்பதை முதலில் கற்றுக் கொள்வோம்.
வழக்கமான பங்கு வர்த்தகத்தில், ஒரு முதலீட்டாளர், ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு வணிகத்தின் பங்குகளை வாங்குவார். அவர் வாங்கிய நிறுவனம் மற்றும் வணிகம் சிறந்து செயல்படும் பட்சத்தின், அதன் பங்குகளின் மதிப்புகள் ஏற்றம் பெறும். பங்குகளின் மதிப்புகள் ஏற்றம் பெறும்பட்சத்தில், அதற்குரிய லாபத்தை, முதலீட்டாளர் பெறுவார்.
Binomo செயலி மூலமான வர்த்தகம் என்பது, வழக்கமான பங்கு வர்த்தகத்தில் இருந்து சற்றே வித்தியாசமானது ஆகும். இங்கே, நீங்கள் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு பதிலாக, அந்த நிறுவனங்களின் சொத்துக்களின் விலை இயக்கத்தை நீங்கள் கணிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில், நிறுவனங்களின் சொத்து விவர மகிப்பு அதிகரிக்கிறதா அல்லது சரிவடைகிறதா என்பது குறித்து நாம் பகுப்பாய்வு செய்து கணிக்க வேண்டும். உங்களது பகுப்பாய்வு சரியாக இருந்தால், உங்களுக்கு லாபம் கிடைக்கும். Binomo வர்த்தக தளத்தில், வர்த்தகம் குறித்து மேலும் விபரமாக தெரிந்து கொள்ள, அந்த தளத்தில் இருக்கும் விரிவான அறிவுத் தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ALSO READ | One rupee Coin value 1 lakh: ஒற்றை ரூபாய் நாணயத்தை கொடுத்து லட்ச ரூபாய் பெறலாம்
Binomo தளத்தில் பயிற்சி பெறுவது எப்படி?
நீங்கள் வர்த்தக நுணுக்கத்தை தெரிந்து கொண்டால், இந்த தளத்தில் உள்ள இலவச டெமோ கணக்கை பயன்படுத்தி, அவற்றில் பயிற்சி செய்யலாம். Binomo உங்களது டெமோ கணக்கில், 1000 அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வரவு வைக்கும். இது பயிற்சி வர்த்தகத்தை துவக்க உங்களுக்கு உதவும். நீங்கள் உங்களது திறமைகளை பரிசோதிக்க, அதில் உள்ள இலவச போட்டிகளிலும் பங்கேற்கலாம். இதில் நீங்கள் ஏதாவது இடையூறுகளை எதிர்கொள்ளும் பட்சத்தில், உங்களுக்கு உதவ, ஒரு பிரத்யேக உதவி மையமும் இந்த தளத்தில் உள்ளது.
Binomo செயலியில் எவ்வாறு டெபாசிட் செய்வது மற்றும் திரும்ப பெறுவது எப்படி?
உங்களுக்கு உங்கள் வர்த்தக திறமையின் மீது நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில், Binomo செயலியில், ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்க, உங்கள் வர்த்தக கணக்கில், பணத்தை டெபாசிட் செய்யலாம். உங்களது வங்கிக் கணக்கில் இருந்தே, இந்த தளத்திற்கு பணத்தை டெபாசிட் செய்வதே பாதுகாப்பானதும் மற்றும் எவ்வித பாதிப்புகளும் இல்லாத நடைமுறையும் ஆகும்.
இதேபோல், நீங்கள் வர்த்தகம் செய்வதன் மூலம் கிடைத்த கூடுதல் வருமானத்தை, நீங்கள் விரும்பிய பணப்பரிவர்த்தனை முறைகளிலேயே, Binomo வர்த்தக கணக்கில் இருந்து, பணத்தை விரைவாக திரும்ப பெறலாம். இதற்கான முழு செயல்முறையும், மிகவும் விரைவாகவும் எவ்வித தடங்கல்களும் இல்லாதவகையில் உள்ளது.
ரூ.350 என்ற அளவிலான குறைந்தபட்ச கணக்கு இருப்பு உடன், நீங்கள் வர்த்தகத்தை தொடங்கலாம். ஆன்லைன் வர்த்தகத்திற்கு நீங்கள் புதியவர் என்பதால், தினசரி குறைந்தபட்ச வர்த்தக தொகை என்ற நிபந்தனை உங்களை கட்டுப்படுத்தாது. நீங்கள் தினமும், ரூ. 70 என்ற அளவிற்கு கூட, நீங்கள் வர்த்தகத்திற்காக செலவிடலாம். Binomo தளத்தின் மூலம் நீங்கள் வர்த்தகம் செய்ய கற்றுக்கொள்ளும் போது, அது குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏதும் ஏற்படாவண்ணம் உங்களை காப்பாற்றுகிறது.
ALSO READ | Rs.500 Rare Note: இந்த 500 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் ஆயிரக்கணக்கில் அள்ளலாம்!!
உங்களுக்கு பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை திரும்ப பெறும் நடைமுறைகளில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், வாடிக்கையாளர் உதவி மையத்தை அணுகி தீர்வினை பெறலாம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்பட்சத்தில், பகல் நேரத்தில்,நீங்கள் உங்களது குறையினை தெரிவிக்கும் பட்சத்தில், அவர்கள் அதற்கான தீர்வினை உங்களுக்கு தெரிவிப்பர்.
சரியாக செய்தால் வர்த்தகம் மிகுந்த பலன் அளிப்பதோடு, உற்சாகமும் தரக்கூடிய நிகழ்வும் ஆகும். இது அனைவரும் கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த ஆன்லைன் வர்த்தகத்திலும், சில அபாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வர்த்தகம் தொடர்பான போதிய அறிவு மற்றும் நுணுக்கங்கள் தெரியாமல் இறங்கும் பலர், இதில் தாங்கள் சம்பாதித்த பணத்தை இழப்பதற்கு வாய்ப்பு உண்டு. சிலநேரங்களில், அவர்கள் பெருமளவிலும் நிதியை இழக்க நேரிடும்.
Binomo உடன் இணைந்து அவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக, ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான அறிவை அவர்கள் பெறுவது மட்டுமல்லாது, இந்த துறையில் அவர்கள் தங்களத மேம்படுத்திக் கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR