Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
CBDT சமீபத்திய ஆண்டுகளில் நேரடி வரிகளில் பல பெரிய வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், பெருநிறுவன வரி விகிதங்கள் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், புதிய உற்பத்தி பிரிவுகளுக்கு விகிதங்கள் 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
புதுடில்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் மத்திய பட்ஜெட் 2021 ஐ தாக்கல் செய்யவுள்ளார். இந்த வேளையில் வரிகள் தொடர்பான பல்வேறு கேள்விகள் பலரது எண்ணங்களில் உள்ளன. மத்திய பட்ஜெட் 2021-22 பிப்ரவரி 1 ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ஜனவரி 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டு அமர்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கும்.
நம் நாட்டைப் பொறுத்தவரை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் இரண்டு வரிகளைப் (Tax) பற்றி இங்கே காணலாம்:
நேரடி வரி என்றால் என்ன?
நேரடி வரி அதாவது Direct Tax என்பது தனிநபர் மற்றும் நிறுவனங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்தும் வரியாகும். இந்த பொறுப்பை வேறு எந்த வரி செலுத்துவோருக்கும் மாற்ற முடியாது. இது நேரடியாக விதிக்கப்படுகிறது. நாட்டில் பல்வேறு வகையான நேரடி வரிகள் உள்ளன - வருமான வரி, செல்வ வரி, பெருநிறுவன வரி, மூலதன ஆதாய வரி. பணம் ஈட்டும் எந்த ஒரு நபரும் இந்த இந்த நேரடி வரியை செலுத்தவேண்டியிருக்கும்.
மறைமுக வரி என்றால் என்ன?
உங்களுக்கு வருமானம் இருக்கிறதோ இல்லையோ, அனைவரும் கட்டும் வரிதான் மற்றொரு வரியான மறைமுக வரி. மறைமுக வரி, இப்போது சரக்கு மற்றும் சேவை வரி (GST) மூலம் உட்படுத்தப்பட்டுள்ளது. இது நாம் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரியாகும். இது வருமானத்தின் மீதான வரி அல்ல, ஆனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி. எனவே, உங்கள் வேலைவாய்ப்பு, வருவாய் அல்லது இலாபங்களைப் பொருட்படுத்தாமல் இந்த வரியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
ALSO READ: Budget 2021: பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமா?
கலால் வரி, சேவை வரி மற்றும் வாட் (VAT) உள்ளிட்ட ஒரு டஜன் மத்திய மற்றும் மாநில வரிகளை ஒன்றிணைத்து, 2017 ஜூலை மாதம் தொடங்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மறைமுக வரி முறைமையை மாற்றியமைத்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், CBDT சமீபத்திய ஆண்டுகளில் நேரடி வரிகளில் பல பெரிய வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், பெருநிறுவன வரி விகிதங்கள் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், புதிய உற்பத்தி பிரிவுகளுக்கு விகிதங்கள் 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன. ஈவுத்தொகை விநியோக வரியும் ரத்து செய்யப்பட்டது.
வரி சீர்திருத்தங்களின் கவனம் வரி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் நேரடி வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றில் உள்ளது. இதேபோல், வரி செலுத்துவோருக்கு இணங்குவதற்கான எளிமையை அதிகரிக்க, தனிநபர் வரி செலுத்துவோருக்கு இணக்கம் மிகவும் வசதியாக இருக்கும் வகையில் வருமான வரி அறிக்கையை முன்கூட்டியே நிரப்பும் வகையில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேறியுள்ளது. ஸ்டார்டப்களுக்கான (Startup) இணக்க விதிமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ALSO READ: PM Kisan: இந்த Budget 2021 விவசாயிகளுக்கு பெறும் பரிசை வழங்கும்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR