நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும் இந்த பட்ஜெட் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மத்திய அரசு, இன்னும் 2 ஆண்டுகளுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஐந்தாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு டிசம்பர் 2023 வரை இலவச உணவு தானியங்களை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்த நிலையில், தற்போது இந்த திட்டம் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்


இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு 81 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகின்றது.  முன்னதாக இந்த இலவச உணவு தானிய விநியோகம் கோவிட் காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அக்ரி ஆக்சிலரேட்டர் நிதி
இதற்கிடையில், வேளாண் துறையில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் முடுக்கி நிதியை அரசு அமைத்துள்ளது. இது விவசாயத் துறையின் விநியோகச் சங்கிலி மற்றும் வலையமைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பம் முதலே இந்தியாவில் இருந்து வரும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு வழங்க வாய்ப்புள்ளது.


ஹைதராபாத் மையத்தில் 'ஸ்ரீ அண்ணா' ஆய்வு
‘ஸ்ரீஅண்ணா’ திட்டத்திற்காக ஹைதராபாத் மையத்தில் ஆய்வு நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அங்கு விரைவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மில்லட்ஸ் அமைக்கப்படும். பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்துக்கு கூடுதலாக ரூ.6,000 கோடியும், விவசாயக் கடனுக்காக ரூ.20 லட்சம் கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். விவசாயிகள் விளைபொருட்களை சேமித்து வைக்க ஊராட்சி அளவில் கூடுதல் கிடங்குகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.



மேலும் படிக்க | Budget 2023: ஏழைகளுக்கு இலவச கேஸ் தொடரும்: பிரதமர் மோடி அரசின் பிளான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ