3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... சென்னையில் எப்போது மழை? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை மழை நிலவரம் உள்ளிட்ட தமிழ்நாடு வானிலை சார்ந்த லேட்டஸ்ட் தகவல்களை இங்கு காணலாம்.

Tamil Nadu Weather News Updates: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் சென்னை மழை நிலவரம் உள்ளிட்ட தமிழ்நாடு வானிலை சார்ந்த லேட்டஸ்ட் தகவல்களை இங்கு காணலாம்.

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வரும் நிலையில், இதனால் அடுத்த சில நாள்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு மழை பெய்யும் என்பதை இங்கு காணலாம்.

1 /8

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று (நவ. 24) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது.   

2 /8

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ. 2) காலை 8.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.   

3 /8

இது வடமேற்கு திசையில் நகர்ந்து,  அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில்  வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி  நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

4 /8

இதை தொடர்ந்து, தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.   

5 /8

தொடர்ந்து, , விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.    

6 /8

சென்னையில் நவ. 27ஆம் தேதி முதல் நவ. 29ஆம் தேதி வரை கனமழை தொடரும் எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.   

7 /8

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது தொடர்ந்து அந்த அமைப்பை கண்காணித்து அதன்பின்னர் சொல்ல இயலும் என்றும் தகவல் அளித்தார். அடுத்த நான்கு நாள்களுக்கு வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.   

8 /8

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பை ஒட்டியே பதிவாகியுள்ளது என்றும் பாலசந்திரன் தகவல் அளித்தார். 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.