Budget 2023: டிவி, ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைப்பு!
Budget 2023: டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறைய உள்ளது.
Budget 2023: 2023-2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்றைய தினம் (பிப்ரவரி-1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் தாக்கலில் பலரும் பலவிதமான எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர். 2023 நிதியாண்டில் மத்திய அரசு அதன் வரவுகளை மிகைப்படுத்த தயாராக உள்ளது. இப்படி பலரும் பல எதிர்பார்ப்புகளோடு ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்களில் அரசாங்கம் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. தனிநபர் வருமான வரி விதிப்பில் சில மாற்றங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டின் 7 முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார் நிதி அமைச்சர்
- சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.
- சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.
- டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.
- இனி பான் கார்டு பொது அடையாள அட்டை!
- பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில், பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம், நாடு முழுவதும் இனி பான் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும். அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ