Budget 2024: சாமானிய மக்கள் எதிர்பார்க்கும் வரிச் சலுகைகள்... சர்ப்ரைஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?
Budget 2024: ஒவ்வொரு ஆண்டும் இருப்பது போலவே அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் குறித்த பல வித எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதில் முக்கியமானவர்கள் வரி செலுத்தும் பிரிவினர்.
Budget 2024: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். எனினும், தேர்தல் நேரத்தில் மக்களை மகிழ்விக்கும் வகையில், அரசு இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்ப்புகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் இருப்பது போலவே அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பட்ஜெட் குறித்த பல வித எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அதில் முக்கியமானவர்கள் வரி செலுத்தும் பிரிவினர். வருமான வரிச் சலுகைகள் (Income Tax Benefits) குறித்த அறிவிப்புகளுக்காக வரி செலுத்துவோர் (Taxpayers)ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், மக்களவைத் தேர்தல் வரை வரிச் சலுகைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)
பட்ஜெட் எதிர்பார்ப்புகளைப் பற்றி பேசுகையில், ClearTax இன் நிறுவனர் மற்றும் சிஇஓ அர்ச்சித் குப்தா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், வரவிருக்கும் பட்ஜெட் நீடித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்கி எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு களம் அமைக்கும் என்று கூறினார். இந்த பட்ஜெட் நிதி ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ஜனரஞ்சக நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையிலும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பட்ஜெட் 2024ல் வரி செலுத்துவோர் எதிர்பார்க்கும் வரிச் சலுகைகளை பற்றி இங்கெ காணலாம்.
80D விலக்கு வரம்பு (80D Deduction Limit)
அதிகரிக்கும் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டு, மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான பிரிவு 80D இன் கீழ் உள்ள விலக்கு வரம்பு தனிநபர்களுக்கு ரூ.25,000-லிருந்து ரூ.50,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆகவும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அர்ச்சித் குப்தா கூறினார். பிரிவு 80டி பலன்களை புதிய வரி விதிப்புக்கு (New Tax Regime) நீட்டிப்பது, சுகாதாரப் பாதுகாப்புக்கு சமமான அணுகலை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹெச்ஆர்ஏ விலக்கு அளிக்கப்படும் மெட்ரோ நகரமாக பெங்களூருவை வகைப்படுத்த வெண்டும்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் மெட்ரோ நகரமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், வருமான வரி நோக்கங்களை வைத்து பார்க்கையில், பெங்களூரு இன்னும் மெட்ரோ அல்லாத நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்ச்சித் குப்தா தெரிவித்தார். இதனால் மற்ற மெட்ரோ நகரங்களில் 50 சதவிகித எஹ்ஆர் விலக்கு (HRA Deductions) கிடைக்கும் அதே வேளையில், பெங்களூரு மக்களுக்கு 40 சதவிகிதமே கிடைக்கின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸ் FD VS RD - மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுப்பது எது...?
மூலதன ஆதாயங்களின் வரிவிதிப்பு
தற்போதைய சிக்கலான மூலதன ஆதாய வரி முறை முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளது. சொத்து வகுப்புகள், வைத்திருக்கும் காலம், வரி விகிதங்கள் மற்றும் வதிவிட நிலை போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பங்குகள் மற்றும் கடன் கருவிகளின் வகைப்பாட்டை மத்திய அரசு (Central Government) சீராக்கி, பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பத்திரங்களுக்கான வரி சிகிச்சையை ஒருங்கிணைத்து, குறியீட்டு விதிகளை எளிதாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
வீடு வாங்குபவர்களுக்கான டிடிஎஸ் வழிகாட்டுதல்கள் (TDS Guidelines For Home Buyers)
50 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கினால் தற்போது 1% டிடிஎஸ் (TDS) கழிக்கப்படுகிறது. இந்த முழு செயல்முறையும் நாட்டில் குடியிருக்கும் இந்திய குடிமக்களுக்கு, சொத்துகளை விற்பனை செய்யும்போது (படிவம் 26QB ஐப் பயன்படுத்துகிறது) எளிமையாக இருக்கிறது. இருப்பினும், இது குடியுரிமை இல்லாத இந்திய (NRI) விற்பனையாளர்களுக்கு சிக்கலானதாக இருக்கிறது என்றும் அர்ச்சித் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2024... பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ