Budget 2024: வரி அடுக்கில் மாற்றம், வரி விலக்கு... காத்திருக்கும் மெகா அறிவிப்புகள்?

Budget 2024: பட்ஜெட் குறித்து வழக்கம் போல மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏதாவது விசேஷமான அறிவிப்புகள் வருமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 3, 2024, 08:56 AM IST
  • பட்ஜெட் குறித்து வழக்கம் போல மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.
  • நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏதாவது விசேஷமான அறிவிப்புகள் வருமா?
  • வரி விதிப்பு முறைகளில் மாற்றம் வருமா?
Budget 2024: வரி அடுக்கில் மாற்றம், வரி விலக்கு... காத்திருக்கும் மெகா அறிவிப்புகள்?  title=

Budget 2024: பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகத்தான் (Interim Budget) இருக்கும். எனினும், வாக்காளர்களை கவரும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. 

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)

பட்ஜெட் குறித்து வழக்கம் போல மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏதாவது விசேஷமான அறிவிப்புகள் வருமா? வரி விதிப்பு முறைகளில் மாற்றம் வருமா? வருமான வரியில் (Income Tax) அரசாங்கம் ஏதாவது பெரிய பரிசை வழங்குமா? இப்படி பல கேள்விகள் உள்ளன. இது தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், மக்களை மகிழ்விக்கும் வகையில் மத்திய அரசு (Central Government) ஏதாவது பெரிய அறிவிப்புகளை வெளியிடலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம் என்று தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

வருமான வரி அடுக்கு மாறுமா? (Change in Income Tax Slab)

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கில் மாற்றம் செய்யப்படலாம் என நிதியமைச்சகத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. ஆனால், குறிப்பிட்ட சம்பளக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு சில தளர்வுகள் கிடைக்கலாம். பழைய வரி முறையைப் (Old Tax Regime) பற்றி பேசினால், தற்போதைய முறையில் வருமான வரியில் மொத்தம் 5 அடுக்குகள் உள்ளன. இதில், 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் வரியில்லா பிரிவில் வருகிறது. இதற்குப் பிறகு, 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வரி நேரடியாக செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரியும், ரூ.20 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும். 

புதிய வரி விதிப்பில் (New Tax Regime), இதுவரை ரூ.7 லட்சம் வரையிலான சம்பளம் வரியில்லா வரம்பில் (Tax Free) வருகிறது. இதில் இன்னும் அதிக தளர்வு கொடுக்கப்படலாம். இந்த வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகின்றது. பழைய வரி விதிப்பில் மாற்றம் இருக்காது. புதிய வரி முறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்.

புதிய வருமான வரி அடுக்கு

பட்ஜெட்டில் (Union Budget 2024) ரூ.10 லட்சம் வரையிலான சம்பள அமைப்பில் கவனம் செலுத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது, ​​10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் இரண்டு வரி அடுக்குகளில் வருகிறது. முதலில் ரூ.6 முதல் 9 லட்சம் வரை 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம் வரி (Income Tax) விதிக்கப்படுகிறது. இரண்டு வரி அடுக்குகளையும் ஒரே ஸ்லாபாக, ரூ.10 லட்சமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படலாம். இதற்கும் 10 சதவீதம் வரி விதிக்கும் திட்டம் உள்ளது. இதில், ரூ.6-9 லட்சம் வரையிலான ஸ்லாப் மாற்றப்படலாம். 

மேலும் படிக்க |  வேலை செய்தா, இந்த நிறுவனத்தில் தான் செய்யனும்! ஊழியர்களை முதலாளியாக்கும் Ideas2IT

15 லட்சம் வருமானம் உள்ளவர்களும் பயனடைவார்கள்

தற்போதைய வரி முறையில், புதிய வரி முறையில், 15 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு, 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதாவது ரூ.10 லட்சம் வரை பார்த்தால் 10 மற்றும் 15 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. 15 சதவீத ஸ்லாப் (Tax Slab) ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு நேரடியாக 10% வரியும், ரூ.10 முதல் 15 லட்சம் வரை வருமானம் இருந்தால் 20% வரியும் விதிக்கப்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், 10 முதல் 12 சதவீத ஸ்லாப்பில் வருபவர்களுக்கு வரிச்சுமை அதிகரிக்கும், ஆனால் ரூ.10 லட்சம் வரை பெரும் நிவாரணம் கிடைக்கும்.  வரி அடுக்குகளை மாற்றி புதிய வரி முறையை பழைய வரி முறையை (Old Tax Regime) விட கவர்ச்சிகரமானதாக மாற்றும் திட்டம் உள்ளது. இருப்பினும், இதில் மற்ற தளர்வுகள் கிடைக்காது.

15 லட்சத்துக்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு பலன் இல்லை

புதிய வரி விதிப்பாக இருந்தாலும் சரி, பழைய வரி விதிப்பாக இருந்தாலும் சரி, இரண்டு கட்டமைப்புகளிலும், 15 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும். வரும் நாட்களிலும் இதே நிலை தொடரும். இந்த வருவாய் பிரிவினருக்கு சிறப்பு விலக்கு அளிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

மேலும் படிக்க | புத்தாண்டில் ‘இந்த’ வங்கி அறிமுகப்படுத்தியுள்ள சிறப்பு FD திட்டம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News