Budget 2024: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இது இடைக்கால பட்ஜெட்டாக உள்ளதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Elections) நடக்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்த ஆட்சிக்காலத்தின் தனது இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. நிதி அமைச்சர், Finance Minister, நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலுக்கு முந்தைய பரிசாக, மோடி அரசு வருமான வரி விலக்குகளை அதிகரிக்கலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு (Middle Class) பயனளிக்கும் என்றும் ஊகிக்கப்படுகிறது.


பட்ஜெட் எதிர்பார்ப்புகள் (Budget Expectations)


2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாகவே இருக்கும் என்றாலும், நடுத்தர வர்க்க சம்பள வகுப்பினர் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். சில வரிகளில் (Taxes) சில தளர்வுகளை (Tax Exemption) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமான வரிக்கான அடிப்படை விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என்றும், இதன் மூலம் குறைந்தது 7 கோடி வரி செலுத்துவோர் பயனடையலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். 


கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை (Income Tax Exemption) ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தியது.


சுமார் பத்தாண்டு காலமாக அடிப்படை வருமான வரி விலக்கு மாறாமல் இருந்த நிலையில், அரசாங்கம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சம்பள வர்க்கத்தில் (Salaried Class) வரி செலுத்துவோருக்கு (Taxpayers) ஒரு பரிசை அளித்தது,  ரூ.50,000 நிலையான விலக்கு அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இதனால், வரி செலுத்தும் சிறு வணிகர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இதனால் மேலும் தொடர்ச்சியான வரி நிவாரணத்திற்கான கோரிக்கைகள் வலுத்தன. 


மேலும் படிக்க | Budget 2024: ஓய்வூதிய தொகையை அதிகரிக்கும் மத்திய அரசு! யார் யாருக்கு தெரியுமா?


வருமான வரி (Income Tax) விலக்கு வரம்பை அதிகரிப்பது நடுத்தர வருவாய் பிரிவினரின் கைகளில் அதிக பணத்தை இருக்கச் செய்வது மட்டுமல்லாமல், பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. இது, தொழில்துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது, வரி செலுத்துவோர் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகையை (Tax Relief) பெறுகின்றனர். இதன் கீழ், பிபிஎஃப் (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (SSY) மற்றும் ஆயுள் காப்பீடு (Life Insurance) ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் வரி விலக்கு பெறப்படுகிறது.


அரசாங்கம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் நிதி நிலையை மேம்படுத்தக்கூடிய சாத்தியமான வரி சீர்திருத்தங்களுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | PPF Withdrawal Rules: உங்கள் PPF பணத்தை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ