Budget 2024: இந்த மாதம்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொழில்துறையினர், வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள், வணிகர்கள் என அனைவரும் இந்த பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) எந்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனவே, ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என நம்பப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த குடிமக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள்


மூத்த குடிமக்களும் (Senior Citizens) இந்த பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். சில காலமாக அதிகரித்து வரும் பணவீக்கம் தங்களின் பிரச்சனைகளை அதிகரித்துள்ளதாக மூத்த குடிமக்களிடையே ஒரு கருத்து உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிதியமைச்சர் (Finance Minister) அவர்களுக்காக பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என நம்பப்படுகின்றது.


மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு வரம்பு


மூத்த குடிமக்கள் அதாவது ஓய்வு பெற்றவர்கள் தங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீட்டின் மீதான வருமானத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓய்வூதியம் கிடைக்காத மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அத்தகைய நபர்களுக்கு, பங்குகள் மற்றும் மியூசுவல் ஃபண்டுகள் மீதான நீண்ட கால மூலதன ஆதாய வரியிலிருந்து (Capital Gains Tax) விலக்கு வரம்பை அரசாங்கம் அதிகரிக்கக்கூடும். 


தற்போது, ​​பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளின் ஈக்விட்டி திட்டங்களில் நீண்ட கால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு பெற ரூ.1 லட்சம் வரம்பு உள்ளது. அதாவது, மியூசுவல் ஃபண்டுகள், பங்குகள் மற்றும் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நபர் ஒரு வருடத்தில் ரூ.1 லட்சம் வரை நீண்ட கால மூலதன ஆதாயங்களைப் பெற்றால், அவர் வரி செலுத்த வேண்டியதில்லை. மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.


வாடகையில் வரி விலக்கு


சொந்த வீடு இல்லாத முதியோர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இதற்காக மாதந்தோறும் ஏராளமான பணம் செலவிடப்படுகிறது. முறையாக ஓய்வூதியம் பெறாத முதியோர்களுக்கு வீட்டு வாடகைக்கு வரி விலக்கு அளிக்கும் வசதியை அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் ஓய்வூதிய வருமானம் இல்லாத ஏராளமான முதியோர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நாட்டில் ஓய்வூதிய வருமானம் இல்லாத, வாடகை வீட்டில் வசிக்கும் முதியோர்கள் ஏராளமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுகாதாரக் காப்பீட்டில் அதிக வரி விலக்கு


கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது. ஹெல்த் பாலிசி இல்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைப் பற்றி பலரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி, காப்பீட்டு நிறுவனங்கள் ஹெல்த் பாலிசியின் பிரீமியத்தை அதிகமாக உயர்த்தியுள்ளன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சுகாதாரக் காப்பீடு (Health Policy) மீதான விலக்கு வரம்பு அதிகரிக்கப்படவில்லை. தற்போது, ​​மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் பாலிசி பிரீமியத்தின் வரம்பு ரூ.50,000 ஆக உள்ளது. இது இந்த பட்ஜெடில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | ஐடிஆர் தாக்கல் செய்பவரா? தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான 5 அட்டவணைகள்!


வரி சேமிப்பு திட்டங்களின் லாக்-இன் கால அளவு குறைப்பு


மூத்த குடிமக்கள் வரிச் சேமிப்புக் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான லாக்-இன் காலத்தை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மூத்த குடிமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் வரி சேமிப்பு FD -க்கான லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் வரி திட்டத்தில் அதாவது ELSS இல் லாக்-இன் காலம் 3 ஆண்டுகள். மூத்த குடிமக்களுக்கான இத்தகைய திட்டங்களின் லாக்-இன் காலத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைக்கக்கூடும். 


இதன் மூலம் ஏராளமான மூத்த குடிமக்கள் பயனடைவார்கள். இந்த வயதில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் தங்கள் உடல் நலனுக்காக அதிகம் செலவழிக்க வேண்டி வரும். இத்தகைய சூழ்நிலைகளில், அவர்கள் பல நேரங்களில் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். லாக்-இன் காலம் குறைக்கப்பட்டால் அவர்களின் பிரச்சனைகள் ஓரளவுக்கு விடுபடும்.


80TTB இன் வரம்பு அதிகரிக்கப்படுமா? 


இப்போது வங்கிகள் அல்லது கூட்டுறவு சங்கங்களில் வைப்புத்தொகைக்கு ரூ.50,000 வரையிலான வட்டி வருமானத்தில் விலக்கின் நன்மை கிடைக்கின்றது. தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (National Saving Certificate) மூலம் பெறப்படும் வட்டியையும் இந்தப் பிரிவின் கீழ் அரசு கொண்டு வர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு இப்படி செய்தால், அதன் மூலம் ஏராளமான மூத்த குடிமக்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். ​​மூத்த குடிமக்கள் NSC போன்ற சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ