Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்... எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு?
Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தில், இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்துவார் என கூறப்படுகின்றது.
Budget 2024: இன்னும் சில நாட்களில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டாக இது இருப்பதால், பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல வகையான எதிர்பார்ப்புகள் உள்ளன. பல துறைகளை சேர்ந்த அமைப்புகளும் நிதி அமைச்சரிடம் (Finanance Minister) தங்கள் கோரிக்கைகளை அளித்துள்ளன. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெண்களுக்கான பட்ஜெட்?
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தில், இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்துவார் என கூறப்படுகின்றது. பெண்களின் பொருளாதார நிலையை வலுவூட்டும் திட்டங்களை நிதி அமைச்சர் கொண்டுவரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண்களின் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதையும், பெண்களிடையே தொழில் முனைவோருக்கான சாத்தியக்கூறுகளை ஆதரிப்பதையும் இலக்காகக் கொண்ட அரசாங்க முயற்சிகள் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவற்றை பலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த முயற்சிகளுக்கு பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) போன்ற திட்டங்கள் மூலம் தேவையான உந்துதல் கிடைக்கின்றது. இது சேமிப்பு கணக்குகள் மற்றும் வைப்பு கணக்குகள் உட்பட வங்கி வசதிகளுக்கான உலகளாவிய அணுகலை பெண்களுக்கு உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதம மந்திரி முத்ரா திட்டம்
அரசின் மற்றொரு முதன்மைத் திட்டமான பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY), பெண் தொழில்முனைவோருக்கு பிணையமில்லாத கடன்களை வழங்குகிறது. இது அவர்களுக்கு மிக உதவியாக இருக்கின்றது. இதன் மூலம் வழக்கமான பாரம்பரிய நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமல் பெண்கள் தங்கள் வணிகத்தைத் தொடங்கவும் விரிவுபடுத்தவும் முடிகிறது.
இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், இந்த திட்டங்களுக்கான ஆதரவு அதிகரிக்கப்பட்டு, சமமான பொருளாதார சூழலுக்கு வழி வகுக்கும் வாய்ப்பை அளிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது.
தற்போது, நாட்டில் பெண்களுக்காக பிரத்யேகமாக பல திட்டங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஏராளமான பெண்கள் பலனடைகிறார்கள். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (MSSC)
2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மஹிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டது. இது மார்ச் 2025 வரை இரண்டு வருட காலத்திற்குக் செயலில் இருக்கும். இதில் பெண்களுக்கு 7.5% நிலையான வட்டி கிடைக்கிறது. இதன் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ. 2 லட்சமாகும். இந்த திட்டத்தில் பகுதியளவு தொகையை எடுக்கும் வசதியும் உள்ளது.
மேலும் படிக்க | காலக்கெடுவுக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லை என்றால் ரூ.5000 வரை அபராதம்!!
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் இந்தியா போஸ்ட் மூலம் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கான மிகச்சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இதன் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம்
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம் பெண் குழந்தைகளின் இயல்பான வாழ்க்கை, பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்கிறது. இந்த திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:
- பாலின-சார்பு, பாலின-தேர்வு ஒழிப்பு
- பெண் குழந்தையின் இயல்பான வாழ்க்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்
- பெண்களின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல்
சகி நிவாஸ்
- நகர்ப்புற, செமி அர்பன் மற்றும் கிராமப்புறங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான இடங்களில் வீடுகள் கிடைப்பதை ஊக்குவிப்பதும், அவர்களின் குழந்தைகளுக்கு டே-கேர் வசதிகளை அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- புதிய விடுதிகளுக்கான கட்டிடங்களை கட்டுதல், தற்போதுள்ள விடுதி கட்டிடங்களை விரிவுபடுத்துதல் மற்றும் வாடகை வளாகத்தில் விடுதி கட்டிடங்களை கட்டுதல் போன்றவற்றுக்கும் இத்திட்டம் உதவுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தரங்களுக்கு உட்பட்டு, சாதி, மதம், திருமண நிலை போன்ற எந்தப் பாகுபாடுமின்றி, பணிபுரியும் அனைத்துப் பெண்களுக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இந்த திட்டங்கள் மேம்படுத்துவதோடு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்தும் இன்னும் பல திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ