PM Kisan உதவித்தொகை உயர்த்தப்படுமா? பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்ல செய்தி!!

Budget 2024: விவசாயத் துறை நிபுணர்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல வித கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 10, 2024, 04:59 PM IST
  • விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு.
  • PM Kisan திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?
  • PM Kisan க்கு பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
PM Kisan உதவித்தொகை உயர்த்தப்படுமா? பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நல்ல செய்தி!! title=

Budget 2024: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024 -க்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் செய்து வருகிறார். அவரும் அவரது குழுவும் பல்வேறு துறைகளின் பிரதிநிதியகளையும் நிபுணர்களையும் சந்தித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் விவசாயத் துறை நிபுணர்களையும் சந்தித்தார்.

விவசாயத் துறை நிபுணர்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் (Nirmala Sitharaman) பல வித கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

- பிஎஃம் கிசான் தவணையை ஆண்டுக்கு 6,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்று நிதி அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

- விவசாயத்துறை பிரதிநிதிகள் விவசாயிகளுக்கு நேரடி பலன் பரிமாற்ற (டிபிடி) திட்டத்தின் மூலம் நேரடி மானியங்களையும் நிதி அமைச்சரிடம் கோரியுள்ளனர்.

- இது தவிர விவசாயத் துறையில் ஆராய்ச்சிக்கான கூடுதல் நிதியையும் அவர்கள் கோரினர்.

PM Kisan திட்டம் என்றால் என்ன?

விவசாயிகளின் நலனுக்கான PM-KISAN திட்டம், பிப்ரவரி 24, 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட வருமான அடிப்படையிலான அளவுகோல்களை பூர்த்தி செய்தால், அவர்களுக்கு நிதி உதவி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

PM Kisan திட்டத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?

பிஎம்-கிசான் திட்டம், மத்திய அரசின் ஒரு முன்முயற்சித் திட்டமாகும். நாடு முழுவதும் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் வருமான ஆதரவை இந்த திட்டம் வழங்குகிறது. விவசாய இடுபொருட்களை வாங்குவதற்கும் வீட்டுச் செலவுகளை செய்வதற்கும் உதவுவதை இந்த நிதி உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தவணைகளாக ஆண்டுதோறும் ரூ. 6,000 வழங்கப்படுகின்றது. இந்த தொகை நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer) அதாவது DBT மூலம் அளிக்கப்படுகின்றது. சமீபத்திய நிலவரப்படி, 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மொத்தமாக 3.04 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை பெற்றுள்ளனர். தற்போது அடுத்த காலாண்டிற்கான தொகை வழங்கப்பட்டவுடன், இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து விவசாயிகளுக்கு அளிகப்பட்ட மொத்தத் தொகை 3.24 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன் பிறகு பிரதமர் எடுத்த சில முதன்மை நடவடிக்கைகளில் பிஎம் கிசான் தவணை பற்றிய முடிவும் ஒன்றாகும். தோராயமாக ரூ.20,000 கோடி விநியோகத்தை உள்ளடக்கிய, 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 17வது தவணையை வெளியிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?

விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு

இடைக்கால பட்ஜெட் ஆவணங்கள், 2024-25 நிதியாண்டில் விவசாய அமைச்சகத்திற்கு ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இது நடப்பு நிதியாண்டை விட சற்று அதிகமாகும்.

விவசாயிகள், இந்த திட்டத்திற்கான தேவையான அம்சங்களை பூர்த்தி செய்தால், இதில் சேர்ந்து பயன் பெறலாம். பிஎம் கிசான் திட்டத்தில் சேர்வது எப்படி? இதற்கு என்ன செய்ய வேண்டும்? இதைப் பற்றி இங்கே காணலாம்.

PM Kisan க்கு பதிவு செய்வதற்கான வழிமுறை:

- முதலில் pmkisan.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
- விவசாயிகள் கார்னருக்கு செல்லவும்
- "New Farmer Registration" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- அடுத்து கிராமப்புற அல்லது நகர்ப்புற விவசாயி பதிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஆதார் எண், மொபைல் எண் மற்றும் மாநிலத்தை உள்ளிட்டு 'Get OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளிடவும், 
- முழுமையான ஆதார் அங்கீகாரத்தை வழங்கவும்.
- ஆதாரின் படி நிலம் மற்றும் வங்கி விவரங்களை உள்ளிடவும்.

மேலும் படிக்க | வருமான வரி சுற்றறிக்கை: TDS/TCS குறித்து வந்த முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News