Union Budget 2025: இன்னும்  சில நாட்களில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதற்கிடையில் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்களிடையே அதிகரித்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Budget 2025 Expectations: வரிசெலுத்துவோருக்கு அதிக எதிர்பார்ப்புகள்


பட்ஜெட் குறித்து வரிசெலுத்துவோருக்கும் (Taxpayers) அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. வங்கி நிரந்தர வைப்பு குறித்த ஒரு முக்கியமான கணிப்பு உள்ளது. முதலீட்டாளர்கள் வங்கி எஃப்டி -இல் டெபாசிட் செய்தால், எஃப்டியில் பெறும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பட்ஜெட்டில் இதில் ஒரு நல்ல செய்தி வரக்கூடும் என் எதிர்பார்க்கப்படுகின்றது.


Bank FD


வங்கிகளின் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து பட்ஜெட்டுக்கு முன் விவாதிக்கப்பட்டு வருகிறது. எஃப்டி மீதான வரியை நீக்க வேண்டும் என்று வங்கிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. வரியை நீக்க அரசு முடிவு செய்தால், அந்த முடிவு வங்கி டெபாசிட்களை பெரிய அளவில் ஊக்குவிக்கும் என வங்கிகள் கூறுகின்றன.


Fixed Deposit: FD -க்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை


வங்கி FD -க்கு வரிச் சலுகைக்கான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டால், வங்கியில் பணம் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டியின் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வோர் பெரிதும் பயனடைவார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில், நிதி நிறுவனங்கள், குறிப்பாக வங்கிகள், நிலையான வைப்புத்தொகைக்கு வரிச் சலுகைகளை கோரியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் எஃப்டி டெபாசிட்கள் அதிகரித்து சேமிப்பு அதிகரிக்கும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது. சமீபகாலங்களில் சேமிப்பு குறைந்துள்ளதால் வங்கிகளின் தரப்பிலிருந்து இந்த ஆலோசனை வந்துள்ளது. சேமிப்பு குறைந்துள்ளதால் வங்கிகளில் கடன் வழங்குவதற்கு பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.


Share Market: பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு குறைவான வரி


Edelweiss Mutual Fund எம்டி மற்றும் சிஇஓ ராதிகா குப்தா, நிதியமைச்சருடனான பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில், மூலதனச் சந்தையின் செயல்திறன் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பத்திரங்கள் மற்றும் ஈக்விட்டி பங்குகளில் நீண்டகால சேமிப்பை ஊக்குவிக்க பரிந்துரைகள் செய்யப்பட்டதாக அவர் கூறினார். இந்த கூட்டத்தில் நிதி செயலாளர், முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்) செயலாளர், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி சேவைகள் துறை செயலாளர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | PF ஏடிஎம் கார்டு, மொபைல் செயலி: அறிமுகம் எப்போது? வரம்பு என்ன? PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்


பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதற்கான வரி குறைவாக இருப்பதால், வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான வரியும் குறைவாக இருக்க வேண்டும் என வங்கிகள் அரசிடம் தெரிவித்துள்ளன. மக்கள் அதிகளவில் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய உதவும் வகையில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


Bank FD vs Share Market Investment: வரி ஒப்பீடு இதோ


- ஒரு நபர் FD -இல் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்து, ஆண்டுக்கு 8 சதவீத வட்டியைப் பெறுகிறார் என வைத்துக்கொள்ளலாம்.
- அவர் ஐந்து ஆண்டுகளில் வட்டியாக மொத்தம் ரூ.4 லட்சம் பெறுவார். 
- அவர் 30 சதவீத வருமான வரி பிரிவில் வந்தால், 40,000 ரூபாய் வரையிலான FD வட்டிக்கு வரி இருக்காது.
- இந்த வரம்பை மீறும் தொகைக்கு இந்த ஸ்லாப் விகிதத்தின்படி வரி செலுத்த வேண்டும். 
- தற்போதைய விதிகளின்படி ரூ.3.60 லட்சத்துக்கு 30% வரி செலுத்த வேண்டும்.
- இது ரூ.1.08 லட்சமாக வரும்.
- ஆனால், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதற்கான வரி (LTCG) இங்கே பொருந்தினால், அவர்கள் 12.5% ​​வரி மட்டுமே செலுத்த வேண்டும்.
- அதாவது மொத்தம் ரூ.45,000 வரி செலுத்தினால் போதும்.
- இதன் மூலம் வங்கி எஃப்டி முதலீட்டை விட, பங்குச்சந்தை முதலீடில் சுமார் 63,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பது தெளிவாகிறது.


மேலும் படிக்க | குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: டிஏ உயர்வு, டிஏ அரியர், 8வது ஊதியக் குழு.... பட்ஜெட்டில் 3 குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ