குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: டிஏ உயர்வு, டிஏ அரியர், 8வது ஊதியக் குழு.... பட்ஜெட்டில் 3 குட் நியூஸ்

7th Pay Commission: பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது.

7th Pay Commission: ஜனவரி 2024-க்கான டிஏ 3% அதிகரித்து மொத்த டிஏ 56% ஆனால், மாத அகவிலைபப்டி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆகும். தற்போதைய அகவிலைபப்டி = ரூ.18,000 x 53% = ரூ.9,540 ஆக உள்ளது. வித்தியாசம்: ஒவ்வொரு மாதமும் ரூ.540, ஆண்டுக்கு ரூ.6,480. அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 உள்ள ஊழியர்களுக்கு டிஏ 3% உயர்ந்தால், டிஏ அதிகரிப்பு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த உயர்வு தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.

 

1 /12

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக பலவித அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் மொத்தமாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர்களுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2 /12

பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று முக்கிய செய்திகள் கிடைக்கக்கூடும் என்று நம்பப்படுகின்றது.  

3 /12

முதலாவது நல்ல செய்தி 8வது ஊதியக்குழு பற்றியதாக இருக்கலாம். 8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். எனினும் இந்த முறை ஊதியக்குழுவுக்கான செயல்முறை நீக்கப்பட்டு அதற்கான மாற்று செயல்முறை அமல்படுத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது.

4 /12

தனியார் துறையில் உள்ளது போல, வருடா வருடம் ஊதிய திருத்தம் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது. செயல்திறன் சார்ந்த சம்பள உயர்வு, அதாவது Performance Based Pay System என்று அழைக்கப்படும் புதிய முறையில், ஊழியர்களின்  செயல்திறன் மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் தீர்மானிக்கபப்படும்.

5 /12

அய்க்ரியோட் ஃபார்முலாவை ஊதிய உயர்வு கணக்கீட்டிற்கு பயன்படுத்துவது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இந்த புதிய ஃபார்முலா ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என நம்பபடுகின்றது.

6 /12

இரண்டவதாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத டிஏ அரியர் தொகை பற்றிய அறிவிப்பு கிடைக்கலாம். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை அளிப்பது பற்றி அரசு பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.

7 /12

டிஏ அரியர் தொகை மூலம் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்களுக்கு தோராயமாக ரூ.11,800 முதல் அதிகபட்சமாக ரூ.37,554 வரை கிடைக்கக்கூடும். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.

8 /12

லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவை. பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம்.  

9 /12

மூன்றாவது நல்ல செய்தி ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி (Dearness Allowance) உயர்வு பற்றிய அறிவிப்பு. டிசம்பர் 2024 -க்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் (AICPI Index) அதற்குள் வருமா என்ற கேள்வி இருந்தாலும் பட்ஜெட்டில் இது குறித்த குறிப்பு கிடைக்கலாம் என்றும், பட்ஜெட் முடிந்த 1 வார காலத்திற்குள் டிஏ உயர்வு பற்றிய அறிவிப்பு வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. டிஏ மற்றும் டிஆர் 3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

10 /12

சம்பள உயர்வு: ஜனவரி 2024-க்கான டிஏ 3% அதிகரித்து மொத்த டிஏ 56% ஆனால், மாத அகவிலைபப்டி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆகும். தற்போதைய அகவிலைபப்டி = ரூ.18,000 x 53% = ரூ.9,540 ஆக உள்ளது. வித்தியாசம்: ஒவ்வொரு மாதமும் ரூ.540, ஆண்டுக்கு ரூ.6,480. அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 உள்ள ஊழியர்களுக்கு டிஏ 3% உயர்ந்தால், டிஏ அதிகரிப்பு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த உயர்வு தொழிலாளர்களுக்கு நிதி உதவி மற்றும் மேம்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.

11 /12

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% உயர்ந்தால், இவை முறையே மாதம் ரூ.270 மற்றும் ரூ.3,750 அதிகரிக்கும்.

12 /12

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.