Budget 2025: 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடையே உள்ளன. இவற்றில் விவசாயிகளுக்கான ஒரு முக்கியமான எதிர்பார்ப்பும் அடங்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Pradhan Mantri Kisan Samman Nidhi


இந்த பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் பெறப்படும் ஆண்டுத் தொகை ரூ.6,000ல் இருந்து ரூ.8,000 ஆக அதிகரித்து அறிவிகப்படலாம் என கூறப்படுகின்றது. பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெறப்படும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்  பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். 


Union Budget


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இதனால் விவசாயிகளின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிடும் என விவசாயிகள் நம்புகின்றனர். இவற்றில் பிஎம்-கிசான் தொகைக்கான அதிகரிப்பு முதன்மையானதாக உள்ளது.


பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, அரசாங்கம் மூன்று சம தவணைகளாக, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்குகிறது.


அதிக விவசாயிகளுக்கு பிரதமர்-கிசான் திட்டம்


பிரதமர்-கிசான் திட்டத்தை அதிக விவசாயிகளிடம் கொண்டு செல்லும் மிகப்பெரிய சவாலை அரசாங்கம் எதிர்கொள்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தார். ஆனால், அப்போது அவர் PM Kisan தொகையை அதிகரிப்பது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை. ஆனால் இந்த முறை விவசாயிகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 6,000 ரூபாய் என உள்ள நிதியை 8,000 ரூபாயாக உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அரியர்: ஊதிய அளவின் அடிப்படையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?


விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா? 


பெரும் நிவாரணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 18 தவணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். 19வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 19வது தவணை பிப்ரவரி 2025 -ல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தவணை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 


இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகும். பணவீக்கம் மற்றும் விவசாயத்தில் அதிகரித்து வரும் செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 6,000 ரூபாய் தவணையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்களும் கருதுகின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக நிதிப் பாதுகாப்பு கிடைப்பதோடு, அவர்கள் விவசாயத்தை சிறந்த முறையில் நிர்வகிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசாங்கம் தவணைத் தொகையை அதிகரிக்குமா? 


பட்ஜெட் 2025 -இல் அரசாங்கம் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் தொகையை உயர்த்தும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது. இத்தொகையை உயர்த்தி அறிவிப்பு வந்தால், லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு அது பெரும் நிவாரணமாக இருக்கும். தங்களின் தேவைகளை உணர்ந்து இந்த பெரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என விவசாயிகள் நம்புகின்றனர்.


மேலும் படிக்க | EPFO 3.0: ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி EPFO பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ