7th Pay Commission: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியரை அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் நம்புகின்றனர்.
7th Pay Commission, DA Arrears: பிப்ரவரி 1, 2025 அன்று, மோடி அரசாங்கம் அதன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த பட்ஜெட்டில் அனைத்து பிரிவினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா பெருந்தோற்று காரணமாக ஜூலை 2020 முதல் ஜனவரி 2021 வரை முடக்கப்பட்ட டிஏ அரியர் தொகை குறித்து மோடி அரசு முடிவெடுக்கும் என்றும் ஊழியர்கள் நம்புகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு முக்கியமான நேரமாகும். அவர்களது பல வித கோரிக்கைகளுக்கான அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கைகளில் 18 மாத டிஏ அரியர் தொகைக்கான அறிவிப்பும் ஒன்றாகும். அதிக் தற்போது கிடைத்துள்ள முக்கிய புதுப்பிப்பு ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7வது ஊதியக் குழு: ஒருபுறம், 8வது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. எனினும், ஊழியர் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் இதற்காக தொடர்ந்து போராடி வருவதால், இதில் இன்னும் சிறு நம்பிக்கையும் உள்ளது.
அடுத்ததாக, 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 18 மாத டிஏ அரியர் தொகையில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள டிஏ அரியரை அரசு விரைவில் வெளியிடும் என்றும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2025-26 பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் ஊழியர்கள் நம்புகின்றனர்.
பிப்ரவரி 1, 2025 அன்று, மோடி அரசாங்கம் அதன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த பட்ஜெட்டில் அனைத்து பிரிவினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா பெருந்தோற்று காரணமாக ஜூலை 2020 முதல் ஜனவரி 2021 வரை முடக்கப்பட்ட டிஏ அரியர் தொகை குறித்து மோடி அரசு முடிவெடுக்கும் என்றும் ஊழியர்கள் நம்புகிறார்கள்.
ஜேசிஎம் இணைச் செயலர், சிவகோபால் மிஸ்ரா, மத்திய அரசிடம் பலமுறை இதற்காக கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அரசு நிலுவைத் தொகையை அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என மத்திய அரசு ஊழியர்கள் நம்புகின்றனர். எனினும், இது தொடர்பாக இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால், 3 ஆண்டுகளுக்கு பிறகும் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள இந்த விவாதங்கள் ஊழியர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ்கோபால் மிஸ்ரா பல வித லெவல்களில் உள்ள ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகைக்கான மொத்த தொகை எவ்வளவு இருக்கும் என கூறியுள்ளார். அதை பற்றி இங்கே காணலாம்.
லெவல்-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும். லெவல்-13 (7வது CPC அடிப்படை ஊதிய அளவு ரூ.1,23,100 முதல் ரூ. 2,15,900 வரை) அல்லது லெவல்-14 (ஊதிய அளவு) ஊழிய்ரகளுக்கான கணக்கீட்டின் படி, பணியாளர்களீன் அகவிலைப்படி நிலுவைத் தொகை ரூ. 44,200 முதல் ரூ.2,18,200 ஆக இருக்கும்.
ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், அவர் 3 மாதங்களுக்கான நிலுவையில் உள்ள டிஏ பாக்கியாக (4,320+3,240+4,320) = ரூ.11,880 -ஐ பெறக்கூடும். ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.56,000 எனில், அவருக்கு 3 மாத டிஏ நிலுவைத் தொகையாக (13,656 + 10,242 + 13,656) = ரூ.37,554 வழங்கப்பட வேண்டும்.
லெவல் 13 (7வது CPC அடிப்படை ஊதிய அளவு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900), லெவல்-14க்கு (பே ஸ்கேல்), டிஏ நிலுவைத் தொகை ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
தற்போது 18 மாத டிஏ அரியர் குறித்த இந்த பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதற்கு அரசு ஒப்புதல் அளித்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.