Budget 2025: 2025 பிப்ரவரி மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன. பட்ஜெட்டுக்கு முன்னர், நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் பல துறைகளை சார்ந்த நபர்களுடன் பல கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலங்களின் கோரிக்கை


நிதி அமைச்சருடன் நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில், மாநில நிதியமைச்சர்கள் 50 ஆண்டு வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி கோரினர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில், ஆரோக்கியமான மேக்ரோ பொருளாதாரச் சூழல், வேகமான மற்றும் வரி வசூல் திறமை ஆகியவற்றின் காரணமாக, 15வது நிதிக் குழுவின் கீழ் கடந்த 45 மாதங்களில் மாநிலங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட தொகை, 14வது நிதிக் குழுவின் கீழ் 60 மாதங்களில் மாற்றப்பட்ட தொகையை விட அதிகம் என தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவிக்கான திட்டத்தையும் (SASCI) குறிப்பிட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலங்களவையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


பஞ்சாப் மற்றும் கேரளா கடன் வாங்குவதில் நெகிழ்வுத்தன்மையைக் கோரியுள்ளன


நிதி நெருக்கடியில் உள்ள பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களும் சிறப்பு பேக்கேஜ்கள் மற்றும் கடன் வாங்குவதில் நெகிழ்வுத்தன்மையை கோருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலங்கள் அதிக கடன் வரம்புகளையும், நிதி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மத்திய அரசிடம் இருந்து ஜல் ஜீவன் மிஷன் கீழ் கூடுதல் நிதியையும் கோரியுள்ளன. 


மகாராஷ்டிரா 'முதலமைச்சர் மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா' திட்டத்திற்கு நிதி கோரியதாகவும், மத்திய அரசு மற்றும் மாநிலத்தின் 50-50 சதவீத செலவின பகிர்வுடன் மத்திய நிதியுதவி திட்டம் (CSS) தொடங்கப்பட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு வருமா, வராதா? 186% ஊதிய உயர்வு கிடைக்குமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ


பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது


2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இது தொடர்பாக ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர். 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


இந்த வகையின் கீழ் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி (SASCI) திட்டத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையையும் மாநிலங்கள் கோரியுள்ளன. சாலை மற்றும் ரயில் உள்கட்டமைப்பு தொடர்பாக, சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டங்களின் அவசியத்தை மாநிலங்கள் வலியுறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்களுக்கு (ஆஷா) வழங்கப்படும் கவுரவ ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.


பேரிடர் நிவாரணத்திற்காக அதிக நிதி


அரசாங்க திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் செலவில் பெரும்பகுதியை மத்திய அரசே ஏற்கும்படி சில மாநிலங்கள் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது. பேரிடர் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி தேவை என்று மாநிலங்கள் வலியுறுத்தியதாகவும், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (SDRF) அதிக ஒதுக்கீடு செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. 


மாநில அரசுகள் இப்படி பல கோரிக்கைகளை மத்திய அரசின் முன் வைத்துள்ளன. இவற்றில் நிதி அமைச்சகம் எவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்? அதிகப்படியான சலுகைகள் எந்த மாநிலத்திற்கு கிடைக்கும்? நிதி அமைச்சரின் உரையில் எந்த மாநிலத்திற்கு அதிக ஒதுக்கீடுகள் இருக்கும்? இவை அனைத்தும் பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கலில் தெளிவாகும்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ.6000 ஓய்வூதியம் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ